முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

2017-ம் ஆண்டு மத்திய அரசு விமானப் பயணம் தடை பட்டியலுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

  • 17

    விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

    சமீபத்தில் விமானங்களில் பயணிகள் விமான ஊழியர்கள் இடையே நிறைய உரசல்கள் மற்றும் சங்கடப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விமானப் பயணத்தில் கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

    பொதுவாக நீங்கள் விமானத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால், பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. விமான நிறுவனங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் வகுக்கப்பட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும். மீறினால் விமானப் பயணம் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படலாம். எனவே விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்

    MORE
    GALLERIES

  • 37

    விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

    2017-ம் ஆண்டு மத்திய அரசு விமானப் பயணம் தடை பட்டியலுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி சக பயணிகளை உடல், வாய்மொழி அல்லது வேறு ஏதேனும் வகையில் புண்படுத்துவது அல்லது விமானத்தை சீர்குலைக்க முயற்சிப்பது போன்ற செயல்களை செய்தால் அவர் விமானப் பயணம் தடை பட்டியலில்(no fly list) சேர்க்கப்படுவார்.

    MORE
    GALLERIES

  • 47

    விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

    அதோடு முரட்டுத்தனமான சக பயணிகளை கையாளுதல், பணியாளர்களுடன் சண்டையிடுதல், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வது, பாதுகாப்பு விதிகளை மீறுவது, மற்றும் விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

    பொதுவாக விமானத்தின் உள்ளே பிரச்சனை செய்யும் பயணிகளின் தவறான நடவடிக்கைகளை 3 வகைகளாக வகைப்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில் தான் தண்டனைகள் வழங்கப்படுகிறது. நிலை 1 வாய்மொழி துஷ்பிரயோகம். கடுமையான சொற்களால் துன்புறுத்தும் பயணிக்கு மூன்று மாதங்கள் வரை தடை விதிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

    உடல் ரீதியான துன்புறுத்தும் நடத்தை இரண்டாவது பிரிவில் வைக்கப்படுகிறது.இந்த வகையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பயணிகளுக்கு 6 மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 77

    விமானத்தில் பயணிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. மீறினால் விமானத்தில் பறக்க தடை.!

    மூன்றாவது பிரிவினர் சக விமான பயணிகள் அல்லது விமான ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தும் மக்களை தண்டிக்க பயன்படுத்துவது. இந்த பிரிவின் கீழ், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு குற்றவாளிகளை விமானத்தில் பறக்க தடை பட்டியலில் வைக்கலாம்.

    MORE
    GALLERIES