அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அதிரப்பள்ளி, மர வீடுகளுக்கு பிரபலமான ஒரு பகுதி ஆகும். கம்பீரமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் 80 அடிக்கு மேல் இருந்து நீர் கீழே விழுகிறது. இது ஒரு மூடுபனியை போன்ற நீர் திவிலைகளால் ஆன சூழலை உருவாக்குகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதிக்குச் சென்று இயற்கையின் அழகை ரசிக்கலாம்
கொச்சி துறைமுகம்:
கொச்சியின் மையத்தில் அமைந்துள்ள ஃபோர்ட் கொச்சி. ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் இங்குள்ள பல கட்டிடங்கள் போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட பகுதி. இந்த நகரத்தை நடந்தோ அல்லது சைக்கிளிலோ சுற்றிப் பார்க்கலாம் மற்றும் உள்ளூர் சுவையான உணவுகளை அனுபவிக்கும் போது தனித்துவமான கட்டிடக்கலையைப் பார்த்து வியக்கலாம்.