முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வரலாற்று சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?

  • 19

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. முக்கியமாக டெல்லியை எடுத்துக்கொண்டால்  குதுப்மினார், இந்தியா கேட், தாமரை கோயில், குருத்வாரா, செங்கோட்டை போன்ற பல இடங்கள் உள்ளன. அதைத்தாண்டி மற்றொரு முக்கிய இடம் உள்ளது. அதை பற்றித்தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 29

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வரலாற்று சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? அப்படி ஒரு புதிய பிக்னிக் ஸ்பாட் தான் இப்பொது நமக்குக் கிடைத்துள்ளது. அதன் பெயர் பாரத் தர்ஷன் பூங்கா. டெல்லியின் பஞ்சாபி பாக்கில் உள்ள பாரத் தர்ஷன் பூங்காவில் இந்திய நினைவுச்சின்னங்களின் பிரதிகள் அனைத்தும் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 39

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    அதுமட்டும் அல்லாமல் இந்த பூங்காவிற்கு மற்றொரு ஸ்பெஷாலிட்டியும் உள்ளது. அந்த அனைத்து நினைவுச் சின்னப் பிரதிகளும் குப்பைகளால் ஆனவை. உண்மை தாங்க. குப்பை என்று தூக்கிப்போட்ட பொருட்களைக் கொண்டு கலை நயமிக்க கட்டிட பிரதிகளைக் கட்டியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 49

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    இது தில்லியில் உள்ள வொண்டர்ஸ் பூங்காவிற்கு மேற்கே அமைந்துள்ளது. பூங்காவின் கட்டுமானத்தில் சுமார் 350 டன் குப்பைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 22 மாதங்களில் 200 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்திய வரலாற்று மற்றும் மத நினைவுச்சின்னங்களின் 22 பிரதிகளை இந்த பாரத் தர்ஷன் கிரீன் பார்க் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 59

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    சுமார் 8.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா குழந்தைகள், மற்றும் குடும்பத்துடன் பிக்னிக் செல்வதற்கு சிறந்த இடமாக உள்ளது. இந்த பூங்காவில், 14 மாநிலங்களின் 21 வரலாற்று நினைவுச்சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நினைவுச்சின்னங்களை உருவாக்க இரும்பு கம்பிகள், மின்கம்பங்கள், பழைய கார்கள், பூங்காக்களின் பழைய கிரில்கள் மற்றும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் இரும்பு குழாய்கள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன .

    MORE
    GALLERIES

  • 69

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    இந்த பூங்காவில் நீங்கள் தாஜ்மஹால், குதுப்மினார், சார்மினார், கோனார்க் கோயில், நாளந்தா பல்கலைக்கழகம், ஹவா மஹால், ராமேஸ்வரம், கேட்வே ஆஃப் இந்தியா, அஜந்தா எல்லோரா குகைகள், கஜுராஹோ கோயில், சச்சி ஸ்தூபம், மைசூர் அரண்மனை, ஹம்பி, சார் தாம் ஆலயம், விக்டோரியா நினைவுச்சின்னம் தவாங் கேட், ஜூனாகத், கோட்டை, ஹவா மஹால் போன்ற இடங்களின் பிரதிகளை பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 79

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    நினைவுச்சின்னங்கள் தவிர, பூங்காவில் 1.5 கிமீ நீளமான பாதை, ஆம்பிதியேட்டர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்   உள்ளது. இந்த பூங்காவை உருவாக்க ரூ.14 கோடி செலவிடப்பட்டுள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இது சூரிய சக்தியில் இயங்குகிறது. ஐந்து சூரிய பேனல் தொகுப்புகள், 84 கிலோவாட் கூரை சோலார் பேனல்கள் உள்ளன. அதனால் இரவு நேரங்களிலும் நினைவுச் சின்னங்களை ஒளிரச் செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    பூங்காவின் அழகை மேம்படுத்த  சம்பா, டிகோமா, கச்சனார், பஞ்சமினா என ஆயிரக்கணக்கான அழகிய மலர்கள் வளர்க்கப்படுகின்றன. சுற்றிலும் பசுமையை பராமரிக்க, அரேகா பாம், சின்கோனியம், ஃபாக்ஸ் டெயில் பாம், ஃபிகஸ் பாண்டா போன்ற  செடிகளும் இந்த இடத்தை அலங்கரிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 99

    இந்தியாவின் அனைத்து நினைவுச்சின்னங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..! எப்படி தெரியுமா?

    பாரத் தர்ஷன் பூங்கா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். ஆனால் திங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் மூடப்பட்டிருக்கும். இங்கு பெரியவர்களுக்கு  ரூ.100 உம், மாலை 4 மணிக்கு பிறகு ரூ.150 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான டிக்கெட் விலை பகலில் ரூ.50, மாலையில் ரூ.75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் தங்களது  டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

    MORE
    GALLERIES