உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான நாடுகள் அங்கு வாழும் அனைத்து மத நம்பிக்கை உள்ள மக்களுக்கும் அவர்களுக்கான மத வழிபட்டுத் தளங்களை கொண்டிருக்கும். ஆனால் உலகில் உள்ள 8 நாடுகளில் மட்டும் ஒரு மசூதி/மஸ்ஜித் கூட இல்லை. அங்கு பலமுறை முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் தகவல்களை பார்ப்போம்..
மொனாக்கோ - பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையில் அமைந்துள்ள மொனாக்கோ உலகின் இரண்டாவது சிறிய நாடு. ஐரோப்பா கண்டத்தில் உள்ள இது அதன் ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் கேசினோக்கள் மற்றும் வரி இல்லாத காரணத்தால் மற்ற நாடுகளை விட தனி நபர் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்டுள்ளது. அனைத்து மதத்தினரும் இங்கு வாழ்ந்தாலும், தேவாலயங்கள் மட்டுமே உள்ளன. வேறு எந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களும் இங்கு இல்லை கட்டுவதற்கு அனுமதியும் இல்லை.
வாட்டிகன் நகரம் - ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள உலகின் சிறிய நாடான இது கிறிஸ்தவத்தின் முக்கிய பிரிவான ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மையமாகத் திகழ்கிறது. மொத்தமே 44 ஹெக்டேர் (108.7 ஏக்கர்) மட்டுமே பரப்பளவு கொண்ட இங்குள்ள போப் கத்தோலிக்க தேவாலயங்களை கட்டுப்படுத்தி வருகின்றார். வாட்டிகன் நகரில் வேறு எந்த மதத்தினரும் வசிக்க முடியாது . அதனால் எந்த மத ஸ்தலத்தையும் கட்டவும் முடியாது.
தென் அமெரிக்காவின் உருகுவே உலகின் இரண்டாவது சிறிய நாடு. நாட்டின் சுமார் 3.5 மில்லியன் மக்கள்தொகையில், 1.1 மில்லியன் பேர் தலைநகர் மான்டிவீடியோ பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் 88-94% ஐரோப்பிய அல்லது கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு இந்துக்கள், முஸ்லிம்கள் உட்பட பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 1000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மான்டிவீடியோவில் மூன்று இஸ்லாமிய மையங்கள் உள்ளன. ஆனால் மசூதி இல்லை.
சாவோ டோம் மற்றும் பிரின்சிபி என்பது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள மிகச் சிறிய குடியரசு ஆகும். முஸ்லிம்கள் இங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் போர்ச்சுகலின் அடிமை நாடாக இருந்த இங்கு 1970க்கு முன் முஸ்லிம்கள் இல்லை. அண்டை நாடுகளான நைஜீரியா மற்றும் கேமரூனில் இருந்து வந்த முஸ்லீம் அகதிகள் இங்கு குடியேறத் தொடங்கினர். அப்போதும் இங்கு அவர்களின் மக்கள் தொகை 1000க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், இங்கு மசூதி இல்லை. முஸ்லிம்கள் திறந்த வெளியில் தான் பிரார்த்தனை செய்கிறார்கள்.
எஸ்தோனியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகக் குறைவு. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1508 முஸ்லீம்கள் தான் வாழ்கின்றனர், அதாவது மக்கள் தொகையில் 0.14 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள். ஆனால், இங்கு மசூதி இல்லை. இருப்பினும், ஒரு இஸ்லாமிய கலாச்சார மையம் மட்டுமே உள்ளது. அங்கு தான் முஸ்லிம்கள் பொதுவாக பிரார்த்தனை செய்கிறார்கள்.
2010 இல் ஸ்லோவாக்கியாவில் முஸ்லீம் மக்கள் தொகை சுமார் 5000 ஆக இருந்தது. அவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதம் பேர். 17 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த முஸ்லிம்கள் மத்திய மற்றும் தெற்கு ஸ்லோவாக்கியாவில் குடியேறிய துருக்கியர்கள் மற்றும் உய்குர்கள். இந்த நாடு ஒரு காலத்தில் யூகோஸ்லாவியா என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு ஸ்லோவாக்கியா பிரிந்தபோது தனி நாடாக மாறியது. யூகோஸ்லாவியா பிரிந்த பிறகு உருவான மற்ற நாடுகளான போஸ்னியா மற்றும் அல்பேனியாவில் இருந்தும் பல முஸ்லிம்கள் அகதிகளாக இங்கு வந்தனர். தலைநகரில் ஒரு இஸ்லாமிய மையம் மட்டுமே உள்ளது.
சான் மரினோ உலகின் ஐந்தாவது சிறிய நாடு. இது தெற்கு ஐரோப்பாவில் இத்தாலிக்கு அருகில் உள்ளது. 61 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ள இங்கு 33,562 மக்கள் தொகை மட்டுமே கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். யூதர்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கு ஒரு முஸ்லீம் கூட இல்லை, எனவே மசூதி கட்டும் கேள்விக்கும் இடம் இல்லை
பூட்டானில் உள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 5000 முதல் 7000 வரை தான் உள்ளது. அங்கு மசூதி கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக அதற்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துவிட்டது. இப்பொது வரை 1 மசூதி கூட இல்லை. அதேபோன்று கிறிஸ்தவம் நீண்ட காலமாக இருந்து வருகிறது ஆனால் பூட்டான் அரசாங்கம் ஒரு தேவாலயம் கட்ட அனுமதிக்கவில்லை.