பட்ஜெட் என்றால் எவ்வளவு ஆகும் என்று தானே யோசிக்கிறீர்கள். அதிகபட்சம் ஐம்பதாயிரத்திற்குள் செல்லக்கூடிய நாடுகளே எக்கச்சக்கமாக உள்ளது. காசு குறைவு என்றால் அது சுமாரான இடமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். எல்லாமே டாப் சுற்றுலா நாடுகள் தான். தங்கள் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக தான் குறைந்த விலையில் மக்களை வர வைக்கிறார்கள். அப்படியான நாடுகளின் லிஸ்ட் இதோ…
இந்தியாவிற்கு மிக அருகே உள்ள நாடுகளில் இருந்து தொடங்கலாம். இமய மலையில் ஒரு பக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். மறுபக்கத்தில் சொந்தக்காரரான நேபாளம் செல்ல விசா கூட தேவை இல்லை. உங்கள் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் இருந்தால் போதும். பைக் செல்லப்பவர்களுக்கு அட்டகாசமான இடம். காத்மாண்டு பள்ளத்தாக்கு, பூதநாத கோயில், பசுபதிநாத் கோயில், தர்பார் சதுக்கம், ஃபெவா ஏரி ஆகியவற்றை பார்த்து ரசிக்கலாம். 38,500 க்கு IRCTC இல் 5 நாள் பேக்கேஜ் கூட உண்டு.
கடற்கரைகள், ஆறுகள், புத்த பகோடாக்கள் மற்றும் பரபரப்பான நகரங்கள் ஒருங்கே சேர்ந்த வியட்நாமில் இ-விசா மூலம்,90 நாட்கள் வரை பயணம் செய்யலாம். ஹா லாங் பே, கு சி சுரங்கங்கள், ஹான் கியாம் ஏரி, போர் எச்சங்கள் அருங்காட்சியகம், ஃபூ குவாக் கடற்கரைகள், போ நகர் ஆகியவை இங்குள்ள முக்கிய ஸ்பாட்கள். பயணம், தங்குமிடம் , உணவு எல்லாம் சேர்த்து 45 வரை தான் அதிகபட்சம் ஆகும்.
உலகிலேயே மிகப்பெரிய கோவில் உள்ள கம்போடியா நகரம் புத்த விகாரங்களை பெயர் பெற்றது. ராஹாக்கள் கால படங்கள் பெரும்பாலும் இங்கு தான் எடுக்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் சில காட்சிகள் கூட இங்கு படமாக்கப்பட்டுள்ளது. புனோம் பென்னின் ஆற்றங்கரையோரங்கள், சிஹானூக்வில்லின் கடற்கரைகள், பட்டம்பாங்கின் காலனித்துவ நகரங்கள், மொண்டுல்கிரியின் நெற்களஞ்சியங்கள் உங்கள் கண்களை கொள்ளை கொள்ளும். அதிகபட்சம் 30000 வரை செலவாகும்.
இந்திய நடிகர்கள் முதல் உலக பிரபலங்கள் வரை எல்லாருமே விடுமுறை என்றால் உடனே கிளம்பும் இடம் மாலத்தீவுகள் தான். இந்தியாவில் இருந்து விமானத்தில் 2 மணிநேரத்தில் செல்லக்கூடிய மாலத்தீவில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. இங்குள்ள கடற்கரைகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஹனிமூன் தம்பதிகளுக்கு ஏற்றதாக இருக்கும். நாடிகள் செல்லும் இடம் என்பதால் அதிக செலவு என்று நினைக்க வேண்டாம். இதற்கும் 40000 தான் ஆகும்.