திருமண சீசன் தொடங்கிவிட்டது. வாரம் தோறும் திருமணங்களும் விருந்துகளும் நடந்து வருகிறது. புதிதாக திருமணம் ஆனவர்கள் எல்லோரும் ஹனிமூனுக்கு எங்கே போவது என்று யோசித்துக்கொண்டு இருப்பார்கள். வெளிநாடுகளுக்கு போக வேண்டும் என்று சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால் விசா கிடைக்க பல நாட்கள் ஆகுமே என்ன செய்வது என்று யோசிப்பார்கள்.
எல்லா நாடுகளுக்கும் போகும் முன்னர் விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நாடுகளுக்கு போன பின்னர் குறிப்பிட்ட நாட்களுக்கு அவர்களே விசா வழங்குவார்கள். இதை விசா ஆன் அரைவல் (VOA) என்று சொல்வார்கள். இதற்கு உங்கள் அடையாள அட்டை, அசல் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படியான ஹனிமூன் செல்லக்கூடிய நாடுகளின் லிஸ்ட் இதோ.
இந்திய நடிகர்கள் முதல் உலக பிரபலங்கள் வரை எல்லாருமே விடுமுறை என்றால் உடனே கிளம்பும் இடம் மாலத்தீவுகள் தான், இந்தியாவில் இருந்து விமானத்தில் 2 மணிநேரத்தில் செல்லக்கூடிய மாலத்தீவில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. இங்குள்ள கடற்கரைகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஹனிமூன் தம்பதிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
மடகாஸ்கர் செல்லும் இந்திய குடிமக்களுக்கு 90 நாட்களுக்கு விசா எளிதாக கிடைக்கிறது. கூட்டம் அதிகள் இல்லாத இடத்தில் ஹனிமூனை கழிக்க விரும்பும் தம்பதிகளுக்கு மடகாஸ்கர் சரியான தேர்வாக இருக்கும். அடுத்து வரும் மாதங்களில் கூட வெயில் கொஞ்சம் அதிகம் இருக்கும். ஆனால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் மடகாஸ்கர் செல்ல சரியான நேரம்.