காலையிலும் மாலையிலும் இதமான குளிக்காற்று வாங்குவதற்காக பீச் பக்கம் போவது நம் பழக்கம். அப்படி போகும் போது அந்த பீச் தண்ணீர் ஒளிர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அப்படி இரவின் இருளில் நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளை பார்க்கும் காட்சி என்றால் அது அற்புதமானதுதானே! அப்படி இந்தியாவில் இருக்கும் கடற்கரைகளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இரவில் எப்படி கடல் ஒளிரும் என்பதை பற்றி முதலில் பார்த்துவிடுவோம். கடல் அலை ஒளிர்வதற்கு காரணம் பயோலுமினென்சென்ஸ். பயோலுமினென்சென்ஸ் என்பது ஒரு வகை ஒளி உமிழும் உயிரினங்கள் ஆகும். உயிரினத்தின் உள்ளே நிகழும் இரசாயன எதிர்வினைகளில் இருந்து வெளியாகும் ஆற்றலால் ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது. கடலில், பாக்டீரியா முதல் சுறாக்கள் வரை, நிறைய பயோலுமினசென்ட் உயிரினங்கள் உள்ளன. கடற்கரைகளில் பார்ப்பது பெரும்பாலும் ஆல்கே வகைகளாகும்.
பங்காரம் கடற்கரை, லட்சத்தீவு : பங்காரம் தீவு அதன் அழகிய நீல நீருக்காக அறியப்படுகிறது. நீர் விளையாட்டுகள், கடற்கரைஉணவகங்கள் தவிர, இந்த இடம் இரவில் ஒளிரும் அம்சத்திற்கும் மிகவும் பிரபலமானது. ஒளிரும் நிகழ்வானது பைட்டோபிளாங்க்டன், பாசிகள் மற்றும் ஜெல்லிமீன்கள் போன்ற பல உயிரினங்கள் ஒளிரும் காட்சியை இங்கே காணலாம்.
பெடல்பாடிம் கடற்கரை, கோவா : கோவா ஒரு பிரபலமான கடற்கரை இடமாக அறியப்படுகிறது. இந்தியாவின் தூய்மையான அதே நேரம் அழகான பல கடற்கரைகளை கோவா கொண்டுள்ளது. இருப்பினும், இருளில் ஒளிரும் நிகழ்வின் காரணமாக பெடல்பாடிம் கடற்கரை தனித்து நிற்கிறது. இங்கு ஒவ்வொரு முறையும் ஒரு அலை பாயும் போது தண்ணீர் ஒளிரும், அதே சமயம் அது உள்வாங்கும்போது ஒளி தானாகவே மங்கிவிடும்.
ஜூஹு கடற்கரை, மும்பை : நீங்கள் மும்பையின் ஜூஹு கடற்கரைக்கு சென்றிருந்தால், கடற்கரையில் மோதும் நீல அலைகளை நீங்கள் கவனித்திருக்கலாம். பைட்டோபிளாங்க்டன் எனப்படும் கடல் நுண்ணுயிரிகள் இந்த நீருக்கு பிரகாசமான நீல ஒளியைக் கொடுப்பதாக அறியப்படுகின்றன. அலைகள் மாறும்போது, நுண்ணுயிரிகள் கரையில் ஒதுங்குவது போல் தெரிகிறது.
மட்டு கடற்கரை, கர்நாடகா : அடுத்த முறை நீங்கள் கர்நாடகாவிற்குச் செல்லும்போது, மட்டு கடற்கரையின் சிறந்த அனுபவத்தாய் நிச்சயம் மிஸ் செய்துவிடாதீர்கள். மனதை மயக்கும் சூரிய அஸ்தமனத்தை சுமார் 30 கிமீ நீண்டுள்ள கடற்கரையை பார்த்துவிட்டு காத்திருந்தால் மின்மினிப் பூச்சிகள், சில நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகள் உட்பட கடல் பகுதியில் உள்ள முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பல பயோலுமினென்சென்ஸ் ஆக மாறி நம் கண்களுக்கு விருந்து படைக்கும்.
அந்தமானின் ஹேவ்லாக் தீவில் உள்ள கடற்கரைகள் : ஹேவ்லாக் தீவில் (ஸ்வராஜ் த்வீப்) படுத்தி அருகே உள்ள கடல் நீரில் அதிக அளவில் பைட்டோபிளாங்க்டன் இருப்பதால் அதிக பளபளப்பு ஏற்படுகிறது. கூடுதலாக, பயோலுமினென்சென்ஸ் விளைவை சந்திரன் இல்லாத இரவுகளில் இன்னும் தெளிவாகக் காணலாம். சிறந்த அனுபவத்திற்காக, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த இடத்திற்குச் செல்ல திட்டமிடுங்கள்.
திருவான்மியூர் கடற்கரை, சென்னை : சென்னையில் உள்ள நன்கு அறியப்பட்ட கடற்கரைகளில் ஒன்ரூ திருவான்மியூர் பீச். அழகான சூரிய உதய காட்சிகளை வழங்குவதற்காக அறியப்படும், இங்கு 2019 இல் பயோலுமினென்சென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில், இருக்கும் ஒரே ஒளிரும் கடற்கரை இது தான். இந்த பீச்சில் இது ஒரு அரிய நிகழ்வு என்றாலும், அது ஒளிரும் போது அலாதியான காட்சியாக இருக்கும்.