முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

 இந்த ரயில் 292 கிமீ தூரத்தை கடக்கும் போது 46 சுரங்கப் பாதைகள் மற்றும் 68 ரயில் நிலையங்களைக் கடந்து செல்கிறது.

 • 18

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  ரயில் பயணம் என்றதால் நமக்கு தனி குதூகலம் தான். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எந்த வயதினராக இருந்தாலும் ரயில் பயணம் என்றதும் முகத்தில் ஒரு 1000 வாட்ஸ் பல்ப் எரிவதை பார்க்கலாம். பயணிக்கும் பொது கடந்து போகும் மலை, ஆறு, காடு, ஊர் எல்லாவற்றையும் ஜன்னல் வழியாக பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  இந்தியாவில் பல தனித்துவமான மலை பாதைகள், கடல் ஓரங்களில், ஏன் கடல் மேலே போகும் ரயில் அனுபவங்களை எல்லாம் பெரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உலகின் சிறந்த, அதே நேரம் தனித்துவமான ரயில் அனுபவத்தை நீங்கள்  நினைத்தால் இலங்கை ரயில் வழி தான் சிறந்த தேர்வாக இருக்கும். அதன் சிறப்புகளை பற்றி தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 38

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  இலங்கை சிலோனாக இருந்தபோது, அங்கு ​​தேயிலை மற்றும் காபி போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருந்த ஒரு ரயில் பாதை தான் இலங்கையின் பெரிய வளர்ச்சிக்கு வித்திட்டது.  இன்றும் அப்படி தான் இருக்கிறது. உலகின் மிகச்சிறந்த ரயில் பாதைகளில் ஒன்றான கொழும்பு முதல் பதுளை வரையிலான ரயில் பாதையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்!

  MORE
  GALLERIES

 • 48

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  ஐரோப்பியர்கள் அவர்கள் விளைவித்த தேயிலை மற்றும் காபியை அவர்கள் நாட்டிற்கு கடல் வழியாக எடுத்துச்சென்றனர். மலைகளில் இருந்து கடற்கரைக்கு எடுத்து வரும் வாகனமாக ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படி 1867 இல் கொழும்பில் இருந்து கண்டி வரை இந்த ரயில் வழி அமைக்கப்பட்டது. பின்னர்  இது 1874 இல் நாவலப்பிட்டி வரையிலும், 1885 இல் நானு ஓயா வரையிலும், 1894 இல் பண்டாரவளை வரையிலும், இறுதியாக 1924 இல் பதுளை வரையிலும் நீடிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  காபி விளைவிக்கும் இடத்தில இருந்து கரைக்கு செல்லும் இந்த ரயில் பயணத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று தானே கேட்கிறீர்கள். இந்த ரயில் தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், மலை நிலப்பரப்புகள், அழகிய காடுகள் அடங்கிய பசுமையான  இயற்கைக்காட்சிகளை அதன் பயணிகளுக்கு அள்ளித் தருகிறது,

  MORE
  GALLERIES

 • 68

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  அதுமட்டும் இல்லாமல் இரயில்வே பொறியியலின் இது குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது. நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள நாடிமண் தலைநகர் கொழும்புவை மத்திய பகுதிகளுக்கு இணைக்கும் வழியாக உள்ளது. இந்த ரயில் 292 கிமீ தூரத்தை கடக்கும் போது 46 சுரங்கப் பாதைகள் மற்றும் 68 ரயில் நிலையங்களைக் கடந்து செல்கிறது.

  MORE
  GALLERIES

 • 78

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  கொழும்பிலிருந்து பதுளை ரயில் பாதையில் பயணம் செய்வது உலகின் மிக அழகிய ரயில் பயணங்களில் ஒன்றாக பட்டியலிடப்படுகிறது, மேலும் இது மறைந்த அதோனி போர்டெய்ன் மற்றும் மைக்கேல் பாலின் மற்றும் பல பயண ஆவணப்படங்களில் இடம்பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  இப்படி ஒரு ரயில் அனுபவம் உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது மக்களே...

  நினைத்துப்பாருங்க.. ஒரு காட்டுக்கு நடுவே ஆறு, அருவி க்கு மேலே பயம் கட்டி அதில் ரயிலை ஓடவிட்டு அதில் பயணிக்கும் வைப்பைத் தந்தாள் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று. அது இந்த கொழும்பு-பதுளை ரயிலில் நிறைவேறும். இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிட்டால் இந்த ரயிலில் பயணிக்க மறந்துவிடாதீங்க..

  MORE
  GALLERIES