முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சென்று ரசிக்கும் 8 காதல் நகரங்களை பற்றிய தகவல்கள் இதோ...

  • 19

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே காதலர்களுக்கு குதூகலம் வந்துவிடும். காதலரோடு சேர்ந்து எங்கே செல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். அதற்காக தான் உலகில் உள்ள அழகிய 8 காதல் நகரங்களை உங்களுக்கு இங்கே சொல்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 29

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    "சிட்டி ஆஃப் லவ்" என்று அழைக்கப்படும் பாரிஸ், காதலர்கள் சேர்ந்து போக விரும்பும் இடங்களில் ஒன்றாகும். சீன் ஆற்றின் குறுக்கே மெழுகுவர்த்தியால்  அலங்கரிக்கப்பட்ட  காண்டில் லைட் டின்னெர், ஒளிரும் ஐபில் டவரை  பார்த்துக்கொண்டே சேர்ந்து உண்பது,  டூயிலரிகளின் அழகிய தோட்டங்களில் உலா செல்வது என பாரிஸ் செய்ய எக்கச்சக்கம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 39

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம் கால்வாய்களில்  குறுக்கே கட்டப்பட்டு, நீரால் சூழப்பட்ட  அழகிய நகரம். பல தம்பதிகளின் கனவுத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இதன் அழகிய கால்வாய்களில் மங்கும் மாலையில் காதலரோடு இணைந்து பயணிப்பது அலாதியானது.

    MORE
    GALLERIES

  • 49

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    மறக்க முடியாத காதலர் தின அனுபவத்தை விரும்பும் தம்பதிகளுக்கு ரோம் சரியான இடமாகும்.அழகான கட்டிடக்கலை முதல் அதன் வசீகரமான கஃபேக்கள்,சுவையான உணவு வகைகள் வரை, ரோமில் காதல் நடவடிக்கைகளுக்கு பஞ்சமில்லை. வில்லா போர்ஹேஸின் அழகிய தோட்டங்கள் வழியாக உலா வரலாம். ஜானிகுலம் மலையின் உச்சியில் இருந்து நகரத்தையும் வானின் அழகிய காட்சிகளையும் ரசிக்கலாம்

    MORE
    GALLERIES

  • 59

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    வெள்ளை கட்டிடங்கள், அழகிய கடற்கரைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றுடன், சாண்டோரினி ஒரு காதல் இடத்தின் சுருக்கமாக உள்ளது. குன்றின் கிராமங்களில் ஒரு காதல் உலா சென்று, ஏஜியன் கடலின் பார்வையுடன் ஒரு சுவையான கிரேக்க உணவை அனுபவித்துக்கொண்டே காதலர் தினத்தை களிக்கலாம். இந்த இடத்தை நீங்கள் எங்கேயும் காதல் படத்தின் பாடலில் பார்த்திருப்பீர்கள்.

    MORE
    GALLERIES

  • 69

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    கடற்கரைகளை விரும்பும் காதல் ஜோடிகளுக்காகவே பாலி காத்துக் கொண்டு இருக்கிறது. கடற்கரையோரம் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்துக்கொண்டே மணலில் கால் பதித்து கரையோரம் நடந்து செல்வது, இந்தோனேஷியா உணவுகளை ரசிப்பது , புத்த கோவிலை ஒன்றாக தரிசிப்பது ஆகியவற்றை சேர்ந்து செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 79

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    அனீம் சீரீசுகள் பார்க்கும் ஜோடிகள் ஒரு முறையாவது ஜப்பான் போக வேண்டும் என்று நினைப்பார்கள் அவர்கள் நிச்சயம் கியோட்டோ நகரத்திற்கு செல்லலாம், நகர வாழ்க்கையோடு பாரம்பரியம் கலந்த ரொமான்டிக் இடம்.அற்புதமான அராஷியாமா மூங்கில் தோப்பு வழியாக பயணிக்கலாம்.நன்கு அறியப்பட்ட புஷிமி இனாரி ஆலயத்திற்குச் செல்லலாம். சுவையான ஜாப்பனிய உணவுகளை சேர்ந்து உண்ணலாம்

    MORE
    GALLERIES

  • 89

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    தனித்துவமான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் கலை மற்றும் கலாச்சாரத்தை விரும்பும் காதல் ஜோடிகளுக்கு ஏற்றது.கோதிக் காலாண்டின் அழகான தெருக்களில் உலா செல்லுங்கள்.அன்டோனி கௌடியின் அற்புதமான படைப்புகளை ரசிக்கலாம். உலகின் சிறந்த கலைஞர்களின் மிகவும் பிரபலமான சில படைப்புகளைப் பார்க்க பிக்காசோ அருங்காட்சியகத்தைப் பார்வையிடவும்.

    MORE
    GALLERIES

  • 99

    பாரிஸ் முதல் வியன்னா வரை...காதலர் தினத்தை கொண்டாட உலகின் சிறந்த 8 காதல் நகரங்கள் இதோ...!

    கிளாசிக்கல் மியூசிக் மற்றும் ஃபைன் டைனிங்கை விரும்பும் தம்பதிகளுக்கு வியன்னா சரியான இடமாகும்.புகழ்பெற்ற வியன்னா ஓபரா ஹவுஸைப் பார்வையிடவும். ஓபரா இசை அனுபவத்தை இதை விட வேறு எங்கும் சிறப்பாக அனுபவித்துவிட்டு முடியாது.

    MORE
    GALLERIES