

எப்போதும் படிப்பு படிப்பு என இருக்கும் குழந்தைக்கு மனமாற்றமாக எங்கேனும் கூட்டிச் சென்றால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அப்படி சென்னையிலேயே சிறந்த பொழுதுபோக்கு இடங்கள் எங்கு உள்ளன என்பதைப் பார்க்கலாம்.


ஐ.சி.எஃப் ரயில் அருங்காட்சியகம் : இங்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் ரயில் குறித்த வரலாறுகளைத் தெரிந்துகொள்வர்கள். அங்கு ரயில்களின் பரிணாம வளர்ச்சியையும் கண்டுகளிக்கலாம். இங்கு பிறந்த நாள் போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளைக் கொண்டாடவும் வசதிகள் உள்ளன. முன்கூட்டியே பதிவு செய்தால் பலூன் செட் அப்புகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம்.


எழும்பூர் குழந்தைகள் அருங்காட்சியகம் : குழந்தைகளுக்கு டைனோசர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எப்போதும் இருக்கும். அவர்களை இங்கு அழைத்துச் சென்றால் நிச்சயம் குதூகலிப்பார்கள். அதோடு வரலாறு, கலாச்சாரம் குறித்த தகவல்களும் இங்கும் காணக்கிடைக்கும். இது காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.


ராஜ் பவன் : இது கவர்னர் மாளிகை என்றும் கூறுவார்கள். இங்கு சாதாரணமாக சென்று விட முடியாது. www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்தால் அரை மணி நேரத்திற்கு முன் கூட்டிய செல்ல வேண்டும். அங்கு சென்வதால் பாரம்பரிய கட்டிட வேலைபாடுகளைக் காண முடியும். சில்வர் ஜூப்லி பூங்கா, நக்ஷத்ரா கார்டன், சோலார் பவர் பிளாண்ட், மான் என சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. இங்கு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி என ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.


கிண்டி பாம்பு பண்ணை : கிண்டி தேசிய பூங்கா குழந்தைகளிடையே மிகப் பிரபலம். இங்கு பாம்புகளுக்கென பிரத்யேக கட்டமைப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட 34 வகையான பாம்புகளை இங்குக் காணலாம். அவற்றை காணும் போது கட்டாயம் உங்கள் குழந்தை உற்சாகத்தில் துள்ளி குதிப்பார்கள். காலை 9 மணி முதல் 5.30 மணி வரை பூங்கா இயங்கும். செவ்வாய் கிழமை மட்டும் விடுமுறை.


சென்னை மீன் பூங்கா : சேத்துப்பட்டில் புதிதாக உருவாக்கிய பூங்காதான் இது. வண்ண வண்ண மீன்களை இங்கு கண்டு ரசிக்கலாம். குழந்தைகளுக்கு பொதுவாகவே மீன்களை ரசிப்பதில் ஆர்வம் இருக்கும். இங்கு அழைத்துச் சென்றால் கட்டாயம் மகிழ்வார்கள். அரியவகையான மீன்களை காணலாம். இங்கு தண்ணீர் இருக்கு நாட்களில் போட்டிங்கும் செல்லலாம். காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயங்கும். பொது விடுமுறை நாட்களிலும் விடுமுறையின்றி இயங்கும்.