முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

Travel Tips : உங்கள் பட்ஜெட் மீறாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா ? இதை படியுங்கள்..

  • 19

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    பயணம் செய்ய விரும்பும் பலருக்கும் அவர்களின் நிதி நிலைமை சரியான ஒத்துழைப்பை கொடுப்பதில்லை. எனவே தான் ஒரு டிராவலருக்கும் அவர் பயணிக்க விரும்பும் இடங்களுக்கும் - இடையில் 'பட்ஜெட் 'ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே தான் நம்மில் பலரும் பட்ஜெட் டிராவல் டெஸ்டினேஷன்களை தேடுகிறோம். அந்த தேடலில் நீங்கள் மிஸ் செய்து விடக்கூடாத சில இடங்களின் லிஸ்ட் இதோ!

    MORE
    GALLERIES

  • 29

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    1. வாரணாசி : உங்கள் பட்ஜெட்டை மீறாமல், கலாச்சாரம் மிக்க ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்றால் - வாரணாசி தான் பெஸ்ட் பிளேஸ். கங்கை நதிக்கரையில் உள்ள வாரணாசி, உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கே உணவு, விடுதி என எல்லாமே மலிவு விலையில் அணுக கிடைக்கும். இங்கே ஆன்மாவைத் தூண்டும் கங்கா ஆரத்தியைக் காணத் தவறாதீர்கள்.

    MORE
    GALLERIES

  • 39

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    2. ரிஷிகேஷ் : உண்மையில் சொல்லப்போனால் ரிஷிகேஷில் ரூ.10000 பட்ஜெட்டில் நீங்கள் ஒரு சொகுசு பயணத்தையே அனுபவிக்கலாம். உலகின் யோகா தலைநகரமான மற்றும் இந்தியாவின் அட்வென்சர் சென்டர் ஆன ரிஷிகேஷ் சில அழகான ஆசிரமங்களின் தாயகமாக உள்ளது. இங்கே மிகவும் பிரபலமான ஒயிட் வாட்டர் ராஃப்டிங்கை வெறும் ரூ.1000 க்குள் அனுபவிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 49

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    3. புதுச்சேரி: உங்கள் பாக்கெட்டில் ரூ.10,000 உள்ளதென்றால், பாண்டிச்சேரியில் நீங்களொரு பணக்காரர் ஆவீர்கள். அதிக பொருட்செலவில்லாமலேயே இந்த இடத்தை நீங்கள் ஆராய மற்றும் சுற்றிப்பார்க்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 59

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    4. நைனிடால் : உத்தரகாண்டில் உள்ள இந்த அழகான மலை வாசஸ்தலத்தை ரூ.10000-க்குள் நன்கு ஆராயலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த இடம் மலிவானது மற்றும் சுவைமிக்க உணவுகளை வழங்கும் சிறிய மலைப்பாங்கான தங்குமிடங்களுக்கு பெயர் பெற்றது.

    MORE
    GALLERIES

  • 69

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    5. லோனாவாலா : சிறிய பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பும் எவரையும் லோனாவாலா ஈர்க்கிறது, குறிப்பாக இந்த இடம் மலையேறுவதற்கான பல வாய்ப்புகளை வழங்குகிறது, மழைக்காலங்களில் சில அழகான நீர்வீழ்ச்சிகளையும் காட்சிப்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 79

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    6. கன்னியாகுமரி: இந்தியாவின் மற்றொரு பட்ஜெட் டிராவல் டெஸ்டினேஷன் - கன்னியாகுமரி ஆகும். அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் சங்கமிக்கும் இந்த இடம் முற்றிலும் வசீகரமானது.

    MORE
    GALLERIES

  • 89

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    7. கோவா : அழகிய கடற்கரைகளின் பூமியான கோவா எப்போதும் பட்ஜெட் மற்றும் லக்ஸரி டிராவல் டெஸ்டினேஷன் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது. இது அனைத்து வகையான பயணிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு இடமாகும். இங்குள்ள தங்குமிடங்கள் நம்பமுடியாத அளவு மலிவானவை மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் சிறந்த கடற்கரையோர காட்சிகளையும் வழங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 99

    கையில் ரூ.10,000 இருந்தால் போதும் இந்த 8 ஊர்களையும் சூப்பரா சுற்றி பார்க்கலாம்!

    8. டார்ஜிலிங் : மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் ஒரு விலையுயர்ந்த சுற்றுலாத்தலம் இடம் என்று பலரும் கருதுகின்றனர், ஆனால் அது ஒரு கட்டுக்கதை. இந்த அழகிய மலைவாசஸ்தலம் பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்றது. இந்த இடத்தில் சில அற்புதமான ஹோம்ஸ்டே மற்றும் ஹாஸ்டல் விருப்பங்கள் உள்ளன, அவை கடுமையான டிராவல் பட்ஜெட்டை கொண்டு இருப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    MORE
    GALLERIES