முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

எல்லை என்றாலே பாதுகாப்பு படை, ராணுவம்  மட்டுமல்ல அங்கே நாம் பார்க்க வேண்டிய அற்புதமான பல இடங்கள் உள்ளன. அதில் சில இடங்கள் லிஸ்ட் இங்கே...

 • 19

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  இந்திய நாடு நிலத்தளவில் பாகிஸ்தான் , , நேபாளம், சீனா, பூட்டான், மியான்மர், பங்களாதேஷ் என்று 7 நாடுகளுடன் எல்லைகளை பகிர்கிறது. எல்லை என்றாலே கலவரம் , பாதுகாப்பு படை, ராணுவம்  என்று  தான்  நினைப்போம் . ஆனால் இந்திய எல்லை பகுதிகளில் உள்ள அழகிய சுற்றுலா தலங்களை பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 29

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  கிராண்ட் டிரங்க் சாலையில் உள்ள கடைசி கிராமத்தில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சாலையில் இரு நாடுகளின் எல்லைக்கு அருகில் வாகா அமைந்துள்ளது. இது பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 29 கிமீ தொலைவிலும், இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து 27 கிமீ தொலைவிலும் உள்ளது. அட்டாரி-வாகா எல்லையில் இரு நாடுகளின் கொடிகளை இறக்கும் தினசரி விழா கண்டிப்பாக பார்க்க வேண்டிய விழா. ஒவ்வொரு மாலையும் சூரிய அஸ்தமனத்திற்கு முன், நடைபெறும் இந்த தினசரி விழாவைக் காண நாள்தோறும் மக்கள் கூட்டம் திரள்கிறது.

  MORE
  GALLERIES

 • 39

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  பாங்காங் ஏரி இந்தியாவின் மிக அழகான ஏரிகளில் ஒன்றாகும், இது இந்தியா மற்றும் சீனாவின் எல்லைக்கு இடையில் அமைந்துள்ளது. இது கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control) வழியாக செல்வதால் இது பாதுகாக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பல புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட பலவகையான பறவைகளுக்கு இந்த ஏரி ஒரு முக்கியமான இனப்பெருக்கம் செய்யும் இடமாக செயல்படுகிறது. பல இந்திய திரைப்படங்கள் பாங்காங் ஏரியின் காட்சியைக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு சீனா ராணுவம் முற்றுகை இட்டது இதன் வடக்கு கரையில் தான்

  MORE
  GALLERIES

 • 49

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  சீன திபெத் எல்லைக்குள் நீங்கள் நடந்து செல்லக்கூடிய சில இடங்களில் நாது லா கணவாய் ஒன்றாகும். 14200 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான வாகனச் சாலைகளில் ஒன்றான இது கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான பாதையாக சமீபத்தில் திறக்கப்பட்டது. எல்லையில் இந்திய மற்றும் சீன வீரர்கள் சேர்ந்து பாதுகாப்பதை நீங்கள் காணலாம்

  MORE
  GALLERIES

 • 59

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  இந்தோ-நேபாள எல்லையில் அமைந்துள்ள தர்ச்சுலா அழகான நகரம், பனி மூடிய பஞ்சுலி சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. உத்ரகாண்டில் அமைந்துள்ள தார்ச்சுலா காளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக நேபாளம் இந்தியாவோடு இணைக்கப்பட்டுள்ளது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரியான மானசரோவர் ஏரியைச் சுற்றி பல அழகிய சுற்றுலாத் தலங்களுக்கு இந்த பாத வழியாக தான் போக வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 69

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  உலகின் மூன்றாவது உயரமான மலையான காஞ்சன்ஜங்காவை நாம் இந்திய நிலபரப்பில் இருந்து ரசிக்கலாம். பூட்டான், சீனா, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படும் காஞ்சன்ஜங்கா நிலப்பரப்பு, டார்ஜிலிங்கின் மலைப்பகுதியிலிருந்து காஞ்சஞ்சங்கா மலை உச்சியின் புகழ்பெற்ற காட்சிகளை வழங்குகிறது. இந்த மலையின் மிக அற்புதமான காட்சிகளை வழங்குவதற்கு டார்ஜிலிங் பிரபலமானது.

  MORE
  GALLERIES

 • 79

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  சுந்தரவனச் சதுப்புநிலக் காடு என அழைக்கப்படும் சுந்தரவன தேசியப் பூங்கா என்பது சதுப்புநிலக் காடுகளால் அடர்ந்த கங்கை டெல்டாவில் உள்ள சுந்தரவனத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் உலகின் வங்காளப் புலிகளுக்கான மிகப்பெரிய காப்பகங்களில் ஒன்றாகும். சுந்தரவனக் காடுகளில் 400க்கும் மேற்பட்ட புலிகள், நீர்வாழ் விலங்குகள், கடல் பாலூட்டிகள், அவிபவுனா மற்றும் ஏராளமான ஊர்வன உள்ளன. இது இந்தியா பங்களாதேஷை இணைக்கிறது

  MORE
  GALLERIES

 • 89

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  மோரே மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய எல்லை நகரம். இந்தோ-மியான்மர் எல்லையில் அமைந்துள்ள நகரம், ஆசிய நெடுஞ்சாலை 1 இல் உள்ளது. இங்கு சுற்றுலா தளங்கள் என்று ஏதும் இருக்காது. ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் செய்யக்கூடியது, பார்டர் ஹாட் டிரேட் என்று அழைக்கப்படும் சர்வதேச வர்த்தக மையத்திற்குச் செல்லலாம்.

  MORE
  GALLERIES

 • 99

  இந்திய எல்லையில் உள்ள இந்த சுற்றுலா தளங்களை பற்றி தெரியுமா..? ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.!

  தவிர சிட்குல், நகோ ஏரி, அலிபுர்தார், லாச்சுங், நிலாங் பள்ளத்தாக்கு, மால்டா ஆகியவையும் இந்தியாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களாகும். இவற்றை சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் சாகசம் நிறைந்ததாக இருக்கும் பயணிகளே!

  MORE
  GALLERIES