இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கிராமங்கள் பட்டியலில் லடாக்கில் உள்ள சுஷுல் மற்றும் கோர்சோக் ஆகியவை அடங்கும். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கிபு, லாலுங் மற்றும் சரங் காஸ், உத்தரகாண்டில் நிதி, மனா, மலரி மற்றும் குஞ்சி, சிக்கிமில் லாச்சென், க்னாதாங், லாச்சுங்,அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜெமிதாங், டுட்டிங், டாக்சிங், சயாங்தாஜோ மற்றும் கிபித்தூ உள்ளன.
உத்தரகாண்ட் கிராமங்களில் 120 தங்கும் விடுதிகள் கட்டப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதோடு உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகள் வழியாக மலையேற்ற பாதைகள் உருவாக்கப்படும். சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகள் ஐஸ் ஸ்கேட்டிங், ரிவர் ராஃப்டிங், பனிச்சறுக்கு மற்றும் பல சாகச விளையாட்டு வசதிகளும் கொண்டுவரப்பட உள்ளது.