அண்டார்டிகாவில் உள்ள ஒரு பெரிய பனிப்பாறை ஒரு பிரகாசமான சிவப்பு நதியை உருவாக்குகிறது. ஆனால் வெள்ளை பனி சூழ்ந்த இடத்தில் எப்படி சிவப்பு நதி உருவாகிறது என்பதற்கான உண்மை மட்டும் 106 ஆண்டுகளாக புரியாத புதிராக இருந்து விஞ்ஞானிகளை குழப்பியது. ஆனால் அதற்கான உண்மையை சமீப காலத்தில் கண்டுபிடித்து விட்டனர். அதை பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
அண்டார்டிகாவின் டெய்லர் பனிப்பாறையிலிருந்தும், போனி ஏரியில் இருந்தும் வெளிப்படும் நீர் சிவப்பு நிறத்தில் ரத்த நிறத்தில் இருக்கிறது. அதனால் இதை ரத்த நீர்வீழ்ச்சி என்று கூட சொல்கிறார்கள்.இந்த நிகழ்வு முதன்முதலில் 1911 ஆம் ஆண்டில் புவியியலாளர் கிரிஃபித் டெய்லரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில், தண்ணீரில் வாழும் சிவப்பு பாசிகள் தண்ணீரின் சிவப்பு நிறத்திற்கு காரணம் என்று அவர் நினைத்தார்.
மேலும் பனிக்கு அடியில் இருக்கும் ஏரியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நுண்ணுயிரிகளின் எச்சம் அடங்கி இருக்கும். இது கிரகத்தின் ஆரம்ப நிலை குறித்து படிக்க உதவும் என்றும் நம்புகின்றனர். செவ்வாய் போன்ற கிரகங்களின் உறைநிலை மாதிரிகளை ஒத்த ஆதாரங்கள் கூட கிடைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.