முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

காவியங்களில் வரும் கதைகளை பிரதிபலிக்கும் இடங்களும் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நதிகளின் வெள்ளப்பெருக்கும் இந்த இடத்திற்கு மக்களை ஈர்க்கிறது.

 • 16

  காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

  ஆன்மிகம் , கட்டிடக்கலை, மற்றும் இயற்கை அழகு இணைந்து ஒருசேர நின்று மக்களை ஈர்க்கும் இடங்களுள் உத்திரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் முக்கிய பங்கு வகிக்கும். காவியங்களில் வரும் கதைகளை பிரதிபலிக்கும் இடங்களும் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நதிகளின் வெள்ளப்பெருக்கும் இந்த இடத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. மிர்சாபூரில் உள்ள சுவாரசியமான இடங்களை உங்களுக்கு சொல்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 26

  காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

  மிர்சாபூரிலிருந்து 8 கிமீ தொலைவில் விந்தியாச்சலில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீக தலத்தில் ஒன்று புனிதமான சக்தி பீடங்களில் ஒன்றான விந்தியச்சல தாம் எனும் கோவிலாகும். மார்கண்டேய புராணத்தின் படி மகிஷாசுரனைக் கொல்ல அவதாரம் எடுத்த விந்தியவாசினியின் சதியின் உடல் பாகங்கள் விழுந்த பூமியில் சக்திபீடங்கள் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் விந்தயாச்சல் என்பது தேவி பிறந்த பிறகு வசிக்கத் தேர்ந்தெடுத்த இடமாகும்.

  MORE
  GALLERIES

 • 36

  காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

  அடுத்ததாக இயற்கை எழில் கொஞ்சும் ஒரு இடத்தை சொல்கிறோம். சக்திநகர் சாலையில் அரௌராவிலிருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லக்கானிய அருவி (lakhaniya dari) தான் அது. குறிப்பாக மலையேறுபவர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான இந்த நீர்வீழ்ச்சியை மலைகளில் ஒரு சிறிய மலையேற்றம் மூலம் அடையலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

  மிர்சாபூர் மாவட்டத்தில் கங்கை கரையின் ஓரம் மணற்கற்களால் ஆன ஒரு அழகிய வரலாற்று கோட்டை அமைந்துள்ளது. உஜ்ஜயினி மன்னன் விக்ரமாதித்யா தனது சகோதரன் ராஜா பரதரிக்காக இந்த சுன்னார் கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. கோட்டையை ஒட்டி நதி ஓடும் காட்சி ரம்யமாக இருக்கும்

  MORE
  GALLERIES

 • 56

  காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

  மிர்சாபூரில் ராமாயணம் தொடர்பான ஒரு இடமும் உள்ளது. வனவாசத்திலிருந்து வீடு திரும்பும் போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது. இதனால், லக்ஷ்மணன் அம்பு ஒன்றை தரையில் துளைத்தார், அங்கிருந்து நீர் ஊற்று வடிவில் தண்ணீர் வெளியேறியது. அதில் சீதை நீர் அருந்திவிட்டு போனதாக ஒரு கதை உண்டு. அந்த இடத்தில் தற்போது சீதா குந் என்ற குளமும், ஒரு வைஷ்ணவ கோவிலும் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  காவியங்களும் இயற்கையும் சேரும் மிர்சாபூரில் பார்க்கவேண்டிய இடங்கள் இதோ..!

  சித்நாத்தின் அருவி மிர்சாபூர் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். வனத்தின் நடுவே அமைந்துள்ள இந்த அருவியில், மலைகளின் உச்சியில் இருந்து பாயும் நீர் படிக்கட்டு போல அழகாக அடுக்கி வைக்கப்பட்ட பாறைகள் மேல் தவழ்ந்து அருவியாக கொட்டும். அருவியின் கேகீழே மட்டும் இல்லாமல் அருவிக்கு மேலே உள்ள அடுக்குகளும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

  MORE
  GALLERIES