சர்வதேச அன்னையர் தினத்தை வழக்கத்தை விட மிக சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்.. இந்த வார இறுதியில் உங்கள் அம்மாவை ஏதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு அழைத்து சென்றால் என்ன? ஆம்! ஒரு மறக்கமுடியாத பயணத்துடன் அன்னையர் தினத்தை கொண்டாடினால் என்ன? ஐடியா நல்லாத்தான் இருக்கு? ஆனால் எங்கே செல்வது? என்று நீங்கள் யோசிக்க தொடங்கினால், நீங்களும் உங்கள் தாயும் சேர்ந்து ரசிப்பீர்கள் என்று நாங்கள் நம்பும் சில அருமையான மற்றும் சுவாரஸ்யமான சுற்றுலாத்தலங்களின் பட்டியல் இதோ..
6. டார்ஜிலிங், மேற்கு வங்காளம் : டார்ஜிலிங்கில் உள்ள பல ஆடம்பரமான தேயிலை தோட்டங்களில் ஒன்றில், உங்கள் தாயுடன் ஒரு மாலை நேர தேநீர் அருந்துவது, அன்னையர் தின கொண்டாட்டத்திற்கான ஒரு யோசனையாக தெரிகிறது. ஆண்டு முழுவதும் இதமான வானிலை, கஞ்சன்ஜங்கா மலையின் கண்கவர் காட்சிகள் மற்றும் கீழே உள்ள தேயிலை தோட்டங்கள் என டார்ஜிலிங்கில் எல்லாமே பேரின்பம் தான்!
8. மஹாபலேஷ்வர், மகாராஷ்டிரா : இந்த அன்னையர் தினத்தில் உங்கள் தாயை வெப்பத்தில் இருந்து விலக்கி வைக்க விரும்பினால், அவரை மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வருக்கு கொண்டு செல்லலாம். இந்த மலைவாசஸ்தலம், நகர வாழ்க்கையில் இருந்து ஒரு நல்ல ஓய்வை கொடுக்கும். மஹாபலேஷ்வரில் ஸ்ட்ராபெர்ரிகள் மிகவும் பிரபலம் என்பதால், நீங்கள் அதன் மலைப்பகுதியை ஆராயும்போது, ஸ்ட்ராபெரி பண்ணைகளையும் பார்வையிடவும், உங்கள் அம்மாவுடன் சேர்ந்து சில ஸ்ட்ராபெரிகளை பறிக்கவும் மறக்க வேண்டாம்.