கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்திருக்கும் ஏற்காடு, இந்தக் காதலர் தினத்தில் தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஏற்காடு "ஏழைகளின் ஊட்டி" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. அழகிய மலைகள், பசுமையான காபி தோட்டங்களுக்கு நடுவில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட பெரிய ஏரிதான் ஏற்காட்டின் முக்கிய சுற்றுலா தளம். இங்கு படகு சவாரி செய்யலாம்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பிப்ரவரியில் காலநிலை பெரும்பாலும் மூடுபனி மற்றும் குளிர்ச்சியாக 14 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். தாவரவியல் பூங்காக்கள் ஏரிகள்,மலையோர கேம்ப் ஃபயர், பள்ளத்தாக்குகலாய் பார்க்கலாம். குணா குகைக்குள் 'அபிராமியே... தாலாட்டும் சாமியே' என்று கூட பாட்டு பாடலாம்.
மலைகள் மற்றும் காதல் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. "மலைகளின் ராணி" யான ஊட்டி ஹனிமூனுக்கு மட்டும் பிரபலமானது அல்ல, காதலர் தினத்தை கொண்டாடவும் ஏற்றது. நீலகிரியின் நீல மலைகள் சாரலில் இருந்து காதலர் தினத்தை கொண்டாட விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்.மலையேற்றம், சைக்கிள் ஓட்டுதல், படகு சவாரி மற்றும் குதிரை சவாரி, கேம்பிங் என்று அனைத்தையும் பண்ணலாம்.
குன்னூர் நகரத்தின் சலசலப்பில் இருந்து தப்பிக்கவும், சிறிது நேரம் அமைதியை அனுபவிக்கவும் விரும்பும் காதலர்களுக்கு ஏற்ற ஒரு அருமையான இடமாகும். குன்னூரின் மூடுபனி மூடிய மலைகளின் ஒப்பற்ற அழகு காதலை வெளிப்படுத்த நல்ல சூழலை உருவாக்கி தரும். அதோடு குமூரில் இருந்து ஊட்டி வரை மலை ரயிலில் சேர்ந்து பயணிக்கலாம்.
உங்கள் காதலர் தினத்தை நம் முன்னோர்களின் இடிபாடுகளின் படுக்கையில் செலவிடுவதை கற்பனை செய்து பாருங்கள். சுமார் 54 ஆண்டுகளுக்கு முன்பு மிக மோசமான புயல்களில் ஒன்றால் இடிக்கப்பட்டது, தனுஷ்கோடி தமிழ்நாட்டின் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கடலோர நகரமாக மாறியது. எச்சங்கள் ரம்யமான சூழலை உருவாக்கி பயணிகளை ஈர்த்து வருகிறது.