கோடைக்காலம் ஆரமித்து விட்டது. வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடப்போகிறார்கள். வீட்டிலேயே அடைந்து கிடைக்காமல் எங்கயாவது சுற்றுலா செல்லலாம் என நம்மில் பலருக்கு தோன்றும். ஆனால், நம்மிடம் இருக்கும் பணம் அந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பதில்லை. செலவுகள் அதிகம் இன்றி யில் இருந்து சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு உதவும் விதமாக, ரூ. 3000 செலவில் ஒரு நாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்ற இடங்கள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.
வர்க்கலா கடற்கரை : குட்டி கோவா என அழைப்பதும் வர்க்கலா கடற்கரை கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. உங்களுக்கு கடற்கரை பிடிக்கும் என்றால், கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்லலாம். சென்னையில் இருந்து வர்க்கலா செல்ல இரயிலில் 15 மணிநேர பணிக்க வேண்டும். டிக்கெட் விலையும் குறைவு. கடற்கரை அருகில் உள்ள தாங்கும் விடுதிகளில் தங்க ஒரு நாளைக்கு, 500 முதல் 800 செலவாகும். மூவாயிரம் ரூபாய்க்குள் உங்களின் வீக்கெண்டு ட்ரிப்பை முடித்துவிடலாம்.