முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

நம்மில் பலருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றதும் கேரளாதான் முதலில் நினைவுக்கு வரும். அப்படி நீங்கள் உங்கள் துணையுடன் தேனிலவுக்கு கேரளா செல்ல விருப்பினால், அங்குள்ள சிறந்த இடங்கள் பற்றி நாங்கள் உங்களுக்கு ஊறுகிறோம்.

  • 19

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    கேரளா என்றதும் நினைவுக்கு வருவது பசுமையான, அமைதியான, கடற்கரைகளை கொண்ட அழகான இடம். அதனால் தான் கேரளா பெரும்பாலானோரின் சுற்றுலா தளமாக உள்ளது. ஆயுர்வேத அனுபவங்கள் முதல் கொச்சியில் படகு சவாரி மற்றும் தேக்கடியில் உள்ள வனவிலங்குகள் வரை, உங்கள் திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கு கடவுளின் சொந்த நாடு ஒரு அற்புதமான இடமாகும். உங்களின் சிறந்த துணையுடன் அற்புதமான லவை குறைந்த செலவில் திட்டமிட்டால், கேரளா உங்களுக்கு நல்ல தேர்வு. தேனிலவுக்காக கேரளா செல்லும் ஜோடிகள், எங்கு செல்லலாம் என நங்கள் கூறுகிறோம்.

    MORE
    GALLERIES

  • 29

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    மூணாறு : தேயிலை தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள மூணாறு, புதுமணத் தம்பதிகளின் தேனிலவுக்கு ஏற்ற இடம் ஆகும். இங்கு நிலவும், குளிச்சியான காலநிலை உங்கள் தேனிலவை சிறப்பானதாக மாற்ற உதவும்.

    MORE
    GALLERIES

  • 39

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    வயநாடு : இந்தியாவின் பசுமையான மலைவாசஸ்தலமாக கருதப்படும் இந்த வயநாடு, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. செழிப்பான மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த வயநாடு, பசுமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

    MORE
    GALLERIES

  • 49

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    ஆலப்புழா : பார்க்கும் இடம் எல்லாம் தண்ணீர் என்ற வகையில், ஆறுகள் நிறைந்து காணப்படும் அந்த ஆலப்புழா, போட் ஹவுஸ் எனப்படும் படகு வீடுகளுக்கு பெயர் பெற்ற இடம். படகு பயணத்தை காதலிப்போர் இங்கு செல்லலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    அதிரப்பள்ளி : கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அதிரப்பள்ளி, மர வீடுகளுக்கு பிரபலமான ஒரு பகுதி ஆகும். சாகச பயணம் மேற்கொள்ள விரும்பும் ஜோடிகளுக்கு இந்த ஒரு சிறந்த தேர்வு ஆகும்.

    MORE
    GALLERIES

  • 69

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    கோவளம் கடற்கரை : கேரளாவின் கோவளம் நகரம் ஆனது, அதன் ஆழமற்ற மற்றும் குறைந்த அலைகள் கொண்ட மூன்று அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. செப்டம்பர் துவங்கி ஏப்ரல் வரை இங்கு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    பேக்கல் : பேக்கல், கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் பள்ளிக்கரை கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு கடலோரப் பகுதி ஆகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோட்டை மற்றும் குகைகள் கேரளாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இடங்கள்.

    MORE
    GALLERIES

  • 89

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    மாராரி கடற்கரை : கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மாராரி, வசீகரிக்கும் மீனவ குக்கிராமங்கள் அடங்கிய ஒரு பகுதி ஆகும். மிகவும் குறைந்த செலவில் உங்கள் தேனிலவை முடிக்க விரும்பினால், இங்கு செல்லலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!

    வாகமண் : கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வாகமண், மலைகளால் சூழப்பட்ட ஒரு சுற்றுலாத்தலம் ஆகும். பார்க்கும் இடம் எல்லாம் பச்சை புல்வெளி, குளிர்ச்சியான காற்று என தேன்நிலவுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடம்.

    MORE
    GALLERIES