உங்க இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று ஓய்வு பெற நினைத்தாலோ அல்லது உங்கள் கண்களுக்கு சற்று விருந்தளிக்க நினைத்தாலோ கோவா உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். கோவாவில் உள்ள சுற்றுலாத் தலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. கடற்கரைகள், கட்டிடக்கலைக்கு பெயர் போன தேவாலயங்கள், சந்தைகள் மற்றும் கலாச்சாரம் என அடுக்கி கொண்டே போகலாம். கோவா என்றாலே, நைட் டிரைவுக்கு பெயர் போனது. உணவுப் பிரியர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம். கோவாவில் பார்க்க வேண்டிய சில அற்புதமான சுற்றுலாத் தலங்களின் பட்டியல் பற்றி இங்கே காணலாம்.