பயணம் செய்வதை பற்றி, ரால்ப் வால்டோ எமர்சனின் ஒரு பிரபலமான கூற்று உள்ளது. அது - "பாதை செல்லும் இடத்தை பின்தொடராதீர்கள். அதற்கு பதிலாக பாதை இல்லாத இடத்திற்கு சென்று ஒரு தடத்தை விட்டு விடுங்கள்" - என்பதே ஆகும். கிட்டத்தட்ட எல்லோருமே செய்யும் ஒரு விடயத்தை நீங்களும் செய்யும் போது, அதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது? அதில் என்ன வித்தியாசமான அனுபவம் கிடைக்க போகிறது? மாறாக சற்றே வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அது சற்றே அசௌகரியமான அனுபவத்தை வழங்கினாலும் சரி அல்லது நீங்கள் நினைத்து கூட பார்த்திராத "வேற லெவல்" அனுபவத்தை வழங்கினாலும் சரி.. உங்களுக்கு முற்றிலும் புதுமையான ஒரு அனுபவம் கிடைப்பது மட்டும் உறுதி!
எனவே அடுத்த முறை உங்கள் எல்லைகளை விட்டு நீங்கள் வெளியே செல்லும் போது, டூரிஸ்ட் ஆக செல்லாதீர்கள், ஒரு டிராவலர் ஆக, ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆக செல்லுங்கள். ஏனெனில் ஒரு பயணத்தின் போது உங்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான மகிழ்ச்சிகள் நீங்கள் செய்யும் வித்தியாசமான முயற்சிகளிலேயே அடங்கி இருக்கிறது. அப்படி என்ன வித்தியாசமாக செய்வது? என்று நீங்கள் கேட்டால், அடுத்த முறை நீங்கள் டிராவல் செய்யும் போது வழக்கமான ஹோட்டல்களில் தங்குவதற்கு பதிலாக சற்றே வித்தியாசமான இடங்களில் 'ஸ்டே' செய்து பாருங்கள் என்பதே எங்களின் பதிலாக இருக்கும்!இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்க இந்தியாவில் உள்ள சில வித்தியாசமான மற்றும் வினோதமான தங்குமிடங்களை உங்களுக்காக இதோ..
2. நாகா மோருங், நாகலாந்து : மோருங் என்பது நாகர்களின் முக்கிய "நிறுவனமாகும்", மேலும் சமூகத்தின் திருமணமாகாத அனைத்து ஆண் உறுப்பினர்களின் சமூக வாழ்க்கைக்கான மையமாகவும் உள்ளது. சிறுவர்கள் தங்கள் பெரியவர்களிடமிருந்து சமூக நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் இடமாகும். இதுதொடர்பான மேலதிக அனுபவங்களை பெற நீங்கள் நாகாலாந்தில் உள்ள ஷாலோம் ரிசார்ட்டை முயற்சி செய்யலாம்.