கோடைகாலம் ஆரமித்துவிட்டது. இனி, பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஒருநாள் சுற்றுலா செல்ல நீங்கள் திட்டமிட்டால், நாங்கள் சில இடங்களை உங்களுக்கு கூறுகிறோம். தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான மாவட்டமாக கோயம்புத்தூர் உள்ளது. இந்த மாநகரை சுற்றி குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
சிறுவாணி அருவி : கோவை மாநகரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி, கோவைக் குற்றாலம் என அழைக்கப்படுகிறது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம் ஆகும். உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க அருமையான இடம்.