மார்ச் மாதம் தொடங்கிவிட்டால் பண்டிகைகள் களைகட்டத் தொடங்கிவிடும். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை ஒட்டியே பல வடஇந்திய திருவிழாக்கள் வருகின்றனர். ஹோலி திருவிழாவிற்கு 1 வாரம் முன்னர் உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா பகுதியில் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து கொண்டாடும் லத்மார் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல சீக்கியர்களின் ஹோலா மொஹல்லா திருவிழா ஹோலிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாபில் உள்ள ஆனந்த்பூர் சாஹிப் என்ற இடத்தில் ஹோலா மொஹல்லா என்ற மூன்று நாள் திருவிழாவை மார்ச் 8-10 தேதிகளில் நடத்த நகரம் தயாராகி வருகிறது. ஹோலா மொஹல்லா என்பது பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கால் நிறுவப்பட்ட சீக்கியர்களின் பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இந்து பண்டிகையான ஹோலிக்கு ஒரு நாள் கழித்து இந்தத் திருவிழா நடைபெறுகிறது.
ஹோலா மொஹல்லா சீக்கியர்களுக்கு மிக முக்கியமான மத பண்டிகையாகும். மேலும் இது உலகெங்கிலும் உள்ள சீக்கிய சமூகத்தால் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. ஹோலா மொஹல்லா பண்டிகை சீக்கியர்களின் ‘நகர் கீர்த்தன்’ எனப்படும் நகர ஊர்வலத்துடன் தொடங்குகிறது. சீக்கிய மதத்தில் பஞ்ச் பியாரே (ஐந்து பிரியமானவர்கள்) எனும் 5 தலைவர்கள் தலைமையிலான ஊர்வலமாக இது அமைகிறது.
பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங், சீக்கியர்கள் சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். சீக்கியர்களை மதத்தைத் தாண்டி போர்க்குணம் படைத்த வீரர்களாக மாற்றியதில் இவரது பண்டு அதிகம். கேஷ் (வெட்டப்படாத முடி), காரா (எஃகு வளையல்), கங்கா (ஒரு மர சீப்பு), கச்சா, கிர்பான் (குறுவாள்) ஆகியவை ஒவ்வொரு சீக்கியனும் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்திய வரலாற்றில் சீக்கியர்களின் அணி வீரத்தை வெளிப்படிபடுத்தி நடை காப்பாற்றிய கதைகள் எல்லாம் இவரிடம் இருந்து தான் தொடங்கியது எனலாம். அப்படியான சீக்கியர்கள் போர் குணம் மட்டுமின்றி, தன்னடக்கம் மற்றும் ஆன்மீகத்திலும் திறமையான சமூகத்தை உருவாக்க விரும்பினார். சீக்கிய சமூகத்தின் விழுமியங்களை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.