பிப்ரவரி மாதம் முடிந்துவிட்டது. ஆனால் அதற்குள் மே மாதம் வந்தது போல வெயில் கொளுத்துகிறது. எப்போது கோடை விடுமுறை வரும் எப்போது குளிர் பிரதேசங்களுக்கும் நீர்நிலைகளுக்கு ட்ரிப் போடலாம் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டனர் மக்கள். இந்நிலையில் அடிக்கும் வெயிலுக்கு கொஞ்சம் குளிர் பிரதேசத்தில் போய் செட்டில் ஆனால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்கள் லிஸ்ட் இதோ!
மலைகளின் அரசி என்ற பெருமையை சுமந்து நிற்பவள் நீலகிரி மலை தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அமைந்துள்ள முக்கியமான சிகரங்களில் ஒன்று தொட்டபெட்டா. அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் என்று பல சுற்றுலா தங்களை தன்னுள் ஒளித்துவைத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் குளிர்கால தாங்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்த மலையில் ஏறுவதற்கு 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கடல்மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நாமக்கல் நகரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் அறப்பலீசுவரர் கோவில், தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவை உள்ளன
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை கடல் மட்டத்தில் இருந்து 155 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியான இது தமிழா - கேரள எல்லையாக இருக்கிறது. இங்கு மகாராஜா மெட்டு, மணலாறு மற்றும், மேல்மணலாற போன்ற அணைகள், தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் தயாரிக்கும் கூடங்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களாகவும்.