சித்திரை மாதம் ஸ்டார்ட் ஆகி விட்டது. "டூடே வெதர்" என்று கூகுள் செய்து பார்த்தால் 40 டிகிரிக்கு குறையாமல் காட்டுகிறது. "அடிக்கிற வெயிலுக்கு வாட்டர் டேங்க்குள்ள இறங்கி... ஒரு அரை மணிநேரம் உட்காந்துட்டு வரலாம் போல இருக்கு!" என்கிற மைண்ட் செட்ல இருக்குற எல்லோருடைய மனதிலும் ஒரே ஒரு எண்ணம் தான் ஓடிக்கொண்டு இருக்கும், அது - ஏதாச்சும் ஒரு ஹில் ஸ்டேஷனுக்கு போயி.. ஒரு ரெண்டு மூணு நாள் ஜாலியா இருந்துட்டு வரணும்! அதற்கான லிஸ்ட் தான் இது.
மலைகளின் அரசி என்ற பெருமையை சுமந்து நிற்பவள் நீலகிரி மலை தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அமைந்துள்ள முக்கியமான சிகரங்களில் ஒன்று தொட்டபெட்டா. அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் என்று பல சுற்றுலா தங்களை தன்னுள் ஒளித்துவைத்துள்ளது.
சென்னையிலிருந்து 343 கி.மீ. தொலைவில் சேலத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஷெவராய்ஸ் மலைத்தொடர், ஏற்காடு என்று அழைக்கப்படும் இது இயற்கை அழகின் களஞ்சியமாக உள்ளது. காடுகளில் அடர்ந்த முட்புதர்களுக்கு மத்தியில் காட்டெருமைகள், முங்கூஸ்,பல்புல்ஸ், பார்ட்ரிட்ஜ்கள், சிட்டுக்குருவிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும். பிரமிக்க வைக்கும் ஏற்காடு ஏரி அதன் ஸ்வான் வடிவ படகுகளுடன் பயணிகளை ஈர்த்து வருகிறது.
சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மழையும் கோடையில் குளிர்ச்சியை தேடும் நபர்களுக்கு ஏற்றது. பசுமையான பள்ளத்தாக்குகள், உயரமான மலைகள் மற்றும் ரோஜா தோட்டங்கள் என்று குடும்பத்தோடு பயணிப்பவர்களுக்கு ஏற்றது. நீங்கள் ஒரு அட்ரினலின் ரஷ் தேடுபவர் என்றால், அந்த இடம் உங்களுக்காக பாராகிளைடிங் வசதியையும் வைத்துள்ளது.
நாமக்கல்லில் அமைந்துள்ள கொல்லிமலை அதிகம் பார்க்கப்படாத பகுதி தான் கொல்லிமலை . மருத்துவம் செய்யும் முனிவர்கள் தங்கியிருந்த சித்தர் குகைகள் நிரம்பிய இடமாக சொல்லப்படுகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீங்கள் மலையேற்றம் செய்யலாம். அதோடு அன்னாசி ஆராய்ச்சி பண்ணை, தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவற்றைப் பார்வையிடவும்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை கடல் மட்டத்தில் இருந்து 155 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியான இது தமிழா - கேரள எல்லையாக இருக்கிறது. இங்கு மகாராஜா மெட்டு, மணலாறு மற்றும், மேல்மணலாற போன்ற அணைகள், தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் தயாரிக்கும் கூடங்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களாகவும்.