காலம் காலமாக ஹனிமூன் என்று சொன்னதும் நினைவுக்கு வருவது காஷ்மீர் தான். ரோஜா படத்தில் வரும் “புது வெள்ளை மழை .. இங்கு பொழிகின்றதே..” என்ற ரெக்கார்டிங் எல்லாம் கண்முன் வந்து போகும். தால் ஏரியில் மிதக்கும் படகு இல்லங்களில் இருந்து சூரிய உதயம், அஸ்தமனங்களை ரசிப்பது எல்லாம் அற்புத நினைவுகளை சேர்க்கும்.