கடற்கரை என்றாலே நம்மில் பலருக்கும் பிடிக்கும். சோகமோ சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் நமக்கு கடற்கரைக்கு சென்றால் மறந்து விடும். கடலை பார்த்ததும் நம்மில் பலருக்கு அப்படியே குதித்து நீந்த வேண்டும் என ஆசை வரும். இந்தியாவில் பல கடற்கரைகள் இருந்தாலும், அனைத்திலும் நம்மால் சுதந்திரமாக நீந்த முடியாது. இந்நிலையில், இந்தியாவில் நீச்சலடிக்க அனுமதிக்கும் கடற்கரைகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ராதாநகர் கடற்கரை : இது இந்தியாவின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாகும். ஹேவ்லாக் தீவில் அமைந்துள்ள ராதாநகர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் ஹனிமூன் ஜோடிகளின் கனவு தலங்களில் ஒன்றாகும். தேனிலவு செல்வோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த கடற்கரை, இங்கு காணப்படும் வெள்ளை மணலுக்கு பெயர் பெற்றது.