இந்தியாவில் ஹவுஸ்போட் விடுமுறைகள் சந்தேகத்திற்கு இடமின்றி பலரின் விருப்ப பட்டியலில் இருக்க கூடிய ஒன்று. எனவே, நீங்கள் ஒரு தனித்துவமான வழியில், உங்கள் விடுமுறைகளை செலவழிக்க விரும்பினால் சில சிறப்பான ஹவுஸ்போட் சுற்றுலா தளங்கள் உள்ளன. இந்த பயணங்கள் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதோடு, இயற்கை உலகிற்கு உங்களை நேரடியாக கூட்டி செல்லும். உங்களின் மகிழ்வான பயணத்திற்கு, இந்தியாவின் மிகவும் பிரமிக்க வைக்கும் ஹவுஸ்போட் இடங்களை நாங்கள் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
ஸ்ரீநகர் : ஸ்ரீநகர் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இது பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான படகு அனுபவத்தை வழங்குகிறது. இந்த பயணம் உங்கள் விடுமுறையின் தரத்தை மேம்படுத்தும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். தால் ஏரி பல்வேறு படகுகளை கொண்டுள்ளது. அதிலிருந்து நீங்கள் உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். மேலும் இப்பகுதியின் அழகிய காட்சிகளை நீங்கள் கண்டு மகிழலாம்.
கேரளா : கேரளாவில் ஏராளமான பசுமையான, அற்புதமான இடங்கள் உள்ளன. இது நிச்சயமாக உங்களின் பயணத்தை இனிமையாக்கும். பாரம்பரிய கேரள படகு இல்லமான கெட்டுவல்லம் ஏரியில் நிம்மதியான விடுமுறையை அனுபவிக்கலாம். மேலும், இதை சுற்றியுள்ள சில சிறந்த இடங்களுக்குச் செல்லலாம். இந்த படகுகளில் உள்ள உப்பங்கழிகள் வழியாக இரவு நேர சுற்றுப்பயணங்களையும் செய்யலாம்.
கோவா : கோவா நாட்டின் மிகவும் பிரபலமான கடற்கரை இடங்களில் ஒன்றாகும். மேலும், கோவா ஹவுஸ்போட்டிங் வாய்ப்புகளையும் வழங்குகிறது. சப்போரா மற்றும் மண்டோவி நதிகளில் படகுப் பயணங்கள் கோவாவில் சில சிறந்த நினைவுகளை அளிக்கும். இது போன்ற படகு இல்லங்களில் நீங்கள் தங்கியிருக்கும் காலம் முழுவதும் உண்மையான கோவன் உணவுகளை நீங்கள் உண்டு ரசிக்கலாம்.
உடுப்பி : உடுப்பி செல்லும் போது, அங்கு படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டும், ஸ்வர்ணா நதியை தரிசித்தும் ஸ்டைலாக பயணிக்கலாம். உங்களின் இந்த உல்லாசப் பயணத்தில் நகரங்கள், தென்னந்தோப்புகள் மற்றும் அழகான நதி அமைப்புகளைக் கடந்து பயணிப்பீர்கள். கேரள பாணியில் உள்ள இந்த உன்னதமான படகுகள் அனைத்து சமகால வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
தர்கர்லி : இது மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். இதில் அற்புதமான விஷயம் என்னவென்றால், நீங்கள் இங்கு படகு சவாரி செய்யலாம். எனவே, நீங்கள் ஒரு ஆடம்பரமான விடுமுறையைக் கொண்டாட விரும்பினால், தர்கர்லிக்கு செல்லலாம். ஏனெனில் இங்குள்ள படகு சவாரி உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும். ஒரு சில மணிநேரங்களில், நீங்கள் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டே உப்பங்கழி வழியாக பயணிக்கலாம்..
சுந்தரவனம் : கொல்கத்தாவின் மிகவும் இயற்கையான அழகான பகுதிகளில் ஒன்று சுந்தரவனக் காடுகள். அங்கு நீங்கள் அமைதியான அனுபவத்திற்காக படகில் சவாரி செய்யலாம். நீங்கள் சதுப்பு நிலங்களை கடந்து பயணம் செய்யலாம். உங்கள் படகு பயணம், சுந்தரவனக் காடுகளில் பல தனித்துவமான பறவைகள் மற்றும் விலங்குகளைக் கவனிப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். இந்தப் படகுகளில் மேம்பட்ட வசதிகள் இருப்பதால், வானிலையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.