முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

அருங்காட்சியகங்கள் என்பது ஒரு இடத்தில் வரலாறு,  கலாச்சாரம், பாரம்பரியம், கட்டிடக்கலை ஆகியவற்றை ஒருங்கே பார்க்கும் இடமாகும். 

 • 16

  International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

  ஒவ்வொரு ஆண்டும் மே 18 சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது. அருங்காட்சியகங்கள் என்பது ஒரு இடத்தில் வரலாறு,  கலாச்சாரம், பாரம்பரியம், கட்டிடக்கலை ஆகியவற்றை ஒருங்கே பார்க்கும் இடமாகும்.  உலகம் முழுவதும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றில் வாழ்வில் ஒருமுறையாவது நிச்சயம் பார்க்கவேண்டிய  சில சுவாரஸ்யமான அருங்காட்சியகங்களைப் பற்றி இப்போது சொல்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 26

  International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

  இம்பீரியல் போர் அருங்காட்சியகம், இங்கிலாந்து : இந்த  அருங்காட்சியகம் முதல் உலகப் போரின் போது கட்டப்பட்டது. நீங்கள் நவீன வரலாற்றைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தால், கண்டிப்பாக ஒருமுறை இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகத்தை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிடலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

  உஃபிஸி கேலரி, புளோரன்ஸ் : இத்தாலியின் புளோரன்ஸ் என்ற அழகிய நகரத்தில் அமைந்துள்ள  இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் அதன் கவர்ச்சிகரமான கலைக் கண்காட்சிகளுக்காக பிரபலமானது. போடிசெல்லி, ஜியோட்டோ, சிமாப்யூ, மைக்கேலேஞ்சலோ, லியோனார்டோ டா வின்சி மற்றும் ரஃபேல் போன்ற சிறந்த கலைஞர்களின் படைப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை காலை 8:15 முதல் மாலை 6:30 வரை பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

  மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள இந்த அருங்காட்சியகம் 1872 இல் கட்டப்பட்டது.  கோதிக் கட்டிடக்கலையாழ் உருவாக்கப்பட்ட இது மனித வரலாற்று கலையின் ஒவ்வொரு வடிவத்தையும்கொண்டுள்ளது.  இந்த அருங்காட்சியகத்தின் நுழைவு நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

  MORE
  GALLERIES

 • 56

  International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

  பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன்: இது உலகின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பிரிட்டனின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் 1753 இல் நிறுவப்பட்டது, இது மனித வரலாற்று அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இங்கு பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

  MORE
  GALLERIES

 • 66

  International Museum Day 2023 : சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பார்க்க வேண்டிய முக்கிய அருங்காட்சியங்களின் பட்டியல்..!

  வாட்டிக்கன் அருங்காட்சியகம் , இத்தாலி : இந்த அருங்காட்சியகம் ரோம் நகரின் வாட்டிக்கன் நகரில் அமைந்துள்ளது. வாட்டிக்கன் அருங்காட்சியகங்கள் உலகின் பழமையான மற்றும் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம் 6 ஆம் நூற்றாண்டில் போப் ஜூலியஸ் II அவர்களால் நிறுவப்பட்டது. நீங்கள் இத்தாலிக்குச் சென்றால், கண்டிப்பாக இந்த அருங்காட்சியகத்தைப் பாருங்கள்.

  MORE
  GALLERIES