தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் மக்களின் முக்கிய தலைவலியே இந்த ட்ராபிக் தான். ஓசூர் வழியாக சாலையில் சென்றால் 3 முதல் 5 மணி நேரம் வரை வண்டியை உருட்டிக்கொண்டு போனால் தான் பெங்களூருவை அடைய முடியும். பெங்களுருவில் இருந்து விமானம் ஏற வேண்டும் என்றால் கூடுதலாக 5 மணிநேரம் முன்னரே புறப்பட வேண்டும். இந்த ட்ராபிக் இல்லாமல் ஹெலிகாப்டர் மூலம் 20 நிமிடங்களில் போக முடியும் என்றால் மகிழ்ச்சி தானே?
பெங்களுருவில், முதல் கட்டமாக தற்போது காலையில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, தெற்கு நோக்கி ஓசூர் நகரத்திற்கும் மாலையில் ஓசூரில் இருந்து விமான நிலையத்திற்கும் சேவைகள் தொடங்கப்படுகிறது. சாலையில் 3 மணிநேரம் பயணிக்க வேண்டிய தூரத்தை இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம், 20 நிமிடங்களுக்குள் சென்றடையலாம்.