முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

வெளிநாடுகளில் பழக்கத்தில் உள்ள பீர் பஸ் சுற்றுலா தற்போது தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

  • 18

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    வார இறுதியானால் இளைஞர்களின்  ஸ்பாட்டாக பாண்டிச்சேரி தான் இருக்கிறது. தமிழத்திற்கு அருகே உள்ள ‘குட்டி கோவா; என்றே பாண்டிச்சேரியை சொல்லலாம். அந்த அளவுக்கு கடற்கரைகளில் பார்ட்டிகளும், குதூகலங்களும் மண்டிக்கிடக்கும். விதவிதமான மது, மொட்டை மாடி பார்ட்டிகள், பப்புகள் என்று இருக்கும் பாண்டிச்சேரிக்கு போக புதிய ஒரு வழி உண்டாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாளில் சென்று திரும்பும் வகையில் புதிய பேருந்து சேவை இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால், இந்த பேருந்தின் பெயர் “பீர் பஸ்”. பெயரிலேயே பீர் இருக்கிறதே அப்போது பயணம் முழுக்க பேருந்தில் பீர் குடித்துக்கொண்டே போகலாமா என்று கேட்ட்டால் அங்குதான் ட்விஸ்ட் இருக்கிறது. அதன் முழு தகவல்களையும் பார்ப்போம் வாருங்கள்.

    MORE
    GALLERIES

  • 38

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    புதுச்சேரி பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவ்வப்போது அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் பயண திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் இப்போது கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி என்ற தனியார் நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்காக இந்த பீர் பஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    வார இறுதி நாட்களை ஜாலியாக கழிக்கும் மது பிரியர்களை குறிவைத்து இந்த புதிய சேவை தொடங்கப்படுகிறது. இந்த பீர் பஸ் சேவை வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் இந்த 'பிரே ஹவுஸ் டூர்' என்ற ஒரு நாள் பயணத்திற்கு  ஒரு நபருக்கு ரூ.3,000 கட்டணமாகும். ஆனால் அதில் அடங்கியுள்ள அம்சங்கள் எல்லாம் அட்டகாசம் தான்.

    MORE
    GALLERIES

  • 58

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    பீர் பஸ் என்று பெயர் வைத்திருப்பதால்,பயணத்தின் போது பேருந்திலேயே குடிக்கலாம்  என்று யாரும் நினைக்க வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதிக்கவில்லை என்று இந்தப் பீர் பஸ் பயணத்தை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்னொரு மேட்டர் இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 68

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    பயணத்தின் போது பாண்டிச்சேரியில் அரசு அனுமதித்த இடத்தில் மட்டும் மது அருந்த அனுமதிக்கப்படும். அங்கு மது பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை எவ்வளவு வேண்டுமானால் அருந்தலாம் பேருந்தில் வருபவர்களுக்கு 3 கோர்ஸ் உணவு, அன்லிமிடெட் பிரை, சைடிஷ் ஆகியவை கொடுக்கப்படுமாம்.

    MORE
    GALLERIES

  • 78

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    வெளிநாடுகளில் பழக்கத்தில் உள்ள பீர் பஸ் சுற்றுலா தற்போது தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வர இறுதி நாட்களில் 35 முதல் 40 பயணிகள் வரை சென்னையில் இருந்து பாண்டிச்சேரி அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த பயணம் ஒரு நாள் காலையில் தொடங்கி இரவு நிறைவடைகிறது. இதற்கு இடையில் மதுவோடு சேர்த்து பாண்டிச்சேரி கடற்கரைகளை சுற்றி பார்க்கவும் முடியும்.

    MORE
    GALLERIES

  • 88

    சென்னை டூ பாண்டிச்சேரி.. புதிதாக அறிமுகமாகும் பீர் பஸ் சேவையில் என்னென்ன செய்யலாம்..?

    பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே ஒரு நாள் ஜாலியாக விதவிதமான பீர் வகைகளோடு கொண்டாட நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த செய்தி நற்செய்தியாக அமையும். அதோடு இந்த பீர் பஸ்ஸுக்கான  முன்பதிவு தற்போது தொடங்கி படுவேகமாக நடைபெற்று வருகிறது. நீங்களும் பீர்களோடு பாண்டிச்சேரியை சுற்றி பார்க்க விரும்பினால் இப்போதே உங்கள் டிக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES