நம் ஊரில் பொதுவாக சிவன், திருமால், அம்மன், முருகன் , விநாயகர் என்று பல தெய்வங்களுக்கு கோவில்கள் இருந்து பார்த்திருப்போம். ஆனால் இவை தவிர்த்து சில வித்தியாசமான கோவில்களும் உலகில் உள்ளது. அதில் சில விலங்குகளைக் கடவுளாக பாவிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. அந்த கோவில்களை பற்றி தான் இந்தத் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
பசுக் கோயில், இந்தியா: இந்தியாவில் கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் உள்ள காமதேனு கோயில், இந்து புராணங்களில் தெய்வீகப் பசுவான காமதேனுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து பசுக்களுக்கும் தாயாகவும், செழிப்பு, கருவுறுதல் மற்றும் ஊட்டச்சத்தின் தெய்வமாகவும் கருதப்படும் காமதேனுவின் ஆலயத்திற்கு வருகை தருபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. மேலும், அதன் அழகிய கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது
முதலைக் கோயில், தாய்லாந்து: சைனாடவுனில் இருந்து ஐந்து நிமிட தூரத்தில் தாய்லாந்தில் உள்ள மே சாரியாங் நகரில் அமைந்துள்ள வாட் சோங் காம் கோயில் முதலைகளுக்காக தனித்துவம் பெற்றது. முதலைக் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் பக்தர்கள் முதலைகளை அருகில் இருந்து பார்க்க ஆற்றில் படகு சவாரி செய்ய வேண்டும்.