முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

Travel guide | யாரும் பசி என்று இருக்க கூடாது. எல்லோருக்கும் உணவு வேண்டும் என்பதை எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.

 • 17

  ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

  பயணம் என்பது யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் அந்த பயணத்தின் போது இரவு தங்கி ஓய்வெடுக்க ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பது தான் கஷ்டமான விஷயம். நம் பட்ஜெட்டுக்குள் பார்த்தல் அது தூரமாக இருக்கும். வசதிகள் இருக்காது. வசதிகளை பார்த்தல் விலை எகிறும்.

  MORE
  GALLERIES

 • 27

  ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

  அதனால் மதம் சார்ந்த குழுக்கள் இணைந்து மடங்களை உருவாக்குகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற பல ஆசிரமங்கள் உள்ளன. சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இலவச தங்கும் வசதி உள்ள ஆசிரமங்களை மக்கள் பயன்பாட்டிற்கு விடுகின்றனர். அப்படியான சில இடங்களை பற்றி பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 37

  ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

  கீதா பவன், ரிஷிகேஷ்:: வாழ்க்கையில் ஒரு முறையாவது கங்கைக்கரைக்கு போய் செய்த பாவங்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பர். அப்படி மக்கள் செல்லும் இடங்களில் ஒன்று ரிஷிகேஷ். ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கீதா பவன், ஆசிரமத்தில் 1000க்கும் மேற்பட்ட அறைகள் கொண்டு, பொது மக்கள் தங்க வசதி செய்து தருகிறது. ஆசிரமத்தில் லக்ஷ்மி நாராயண கோவில், மற்றும் நூலகம் உள்ளது. சுத்தமான சைவ உணவுகளை இங்கு உண்டு மகிழலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

  பாரத் ஹெரிடேஜ் சர்வீஸ், ரிஷிகேஷ்: இந்த இடம் மற்ற ஆசிரமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த ஆசிரமத்தில் தாங்கும் வசதியோடு  உடலுக்கும் மனதுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கே நீங்கள் தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் இலவச தங்குமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆசிரமத்தில் பல வெளிநாட்டவர்களும் உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 57

  ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

  ஆனந்தாஷ்ரம், கேரளா:ஆனந்தாஷ்ரமத்தில் நீங்கள் எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழலாம். உங்கள் மனதை மிகவும் அமைதிப்படுத்த உதவும். பாபா ராமதாஸ் நிறுவிய இந்த ஆசிரமம் ஏல உயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்குவதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

  MORE
  GALLERIES

 • 67

  ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

  ஈஷா அறக்கட்டளை, கோயம்புத்தூர் - இந்த ஆசிரமம் வெள்ளியங்கிரி மலைகளால் சூழப்பட்டுள்ளது. மலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான ஆதியோகி சிவன் சிலையை இங்கு காணலாம். ஈஷா அறக்கட்டளையின் தங்குமிடங்களில் தன்னார்வ நடவடிக்கைகளில் பங்குபெறும் மக்களுக்கு இலவச தங்கும் வசதிகளைத் தருகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

  ஸ்ரீ ரமணாஷ்ரம்,தமிழ்நாடு - திருவண்ணாமலை மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தில் தங்குவதற்கு வாடகை செலுத்தத் தேவையில்லை. இங்கு சுத்தமான சைவ உணவை உண்டு மகிழலாம். அங்கிருந்து திருவண்ணாமலை கோவிலை தரிசிக்கலாம்.

  MORE
  GALLERIES