இந்த உலகமே ஒரு சுழற்சி முறையில் தான் இயங்கி வருகிறது. ஒரு நிலம் உருவாகும் அதே நேரம் இயற்கை ஒரு நிலத்தை மூழ்கச்செய்கிறது, குமரிக்கு கீழே ஆப்பிரிக்காவரை ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததாக கூருகின்றனர். ஆனால் இப்போது அது இல்லை. அப்படி உலகின் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கிடக்கின்றன. ஒரு சில ஆய்வுகளின் போது வெளிப்படும்.
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை அருகில் பல சிறிய தீவுக்கூட்டங்கள் உள்ளன. கீ வெஸ்டில் இருந்து 70 மைல் தொலைவில் தீவுகளை உள்ளடக்கிய உலர் டோர்டுகாஸ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. முன்னர் பெரிய தீவுக்கூட்டங்களை உள்ளடக்கி இருந்த இந்த இடத்தின் பல தீவுகள் கடுமையான புயல்கள் மற்றும் காலநிலை காரணமாக, நீருக்கடியில் மூழ்கிவிட்டன,
இந்த அத்தீவுகளில் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஃபோர்ட் ஜெபர்சன் என்ற கோட்டை சிறையும் ஒரு மருத்துவமனையும் இருந்துள்ளது. இந்த சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் அந்த காலத்தில் பெரிய அளவில் பரவி வந்த மஞ்சள் காய்ச்சலுக்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை கொடுத்துள்ளனர்.
பின்னர் இயற்கை சீற்றத்தால் நீருள் முக்கிய இதை உலகம் மறந்துவிட்டது. தற்போது தேசிய பூங்கா சேவையைச் சேர்ந்த கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜோஷ் மரானோ, ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார். ஆய்வின்போது ஒரு குழாய் வடிவம் நீரில் தெரிவதை கவனித்துள்ளார். பின்னர் அதை ஆய்வு செய்த போது அது ஒரு மருத்துவமனைக் கட்டிடம் என்பது தெரிய வந்துள்ளது.
பின்னர், மரானோவின் மாணவர்களில் ஒருவரான டெவோன் ஃபோகார்டி நீருக்கு அடியில் ஆய்வு செய்த போது ஜான் கிரேர் என்று பெயர் பொறிக்கப்பட்ட சமாதி ஒன்று கிடைத்துள்ளது. அந்த பெயரை அரசு தரவுகளில் ஆய்வு செய்தபோது அவர் ஒரு தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது. கோட்டை கட்டும் போது இறந்தவருக்கு எழுப்பப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்று யூகிக்கின்றனர்.