முகப்பு » புகைப்பட செய்தி » திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

சைவ மதத்தின் முக்கியத்தளமான திருவண்ணாமலையில்  தமிழ்நாட்டின் முதல் நடராஜர் சிற்பம் செதுக்கப்பட்ட  கோயில் ஒன்று உள்ளது.

  • 17

    திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

    என்று சொன்னதும் எல்லோருக்கும் கார்த்திகை மாதம் மலையின் மீது வைக்கும் ஜோதி, அண்ணாமலையார் கோவில் தான் நினைவுக்கு வரும். அது தான் பிரதான ஈர்ப்பாக இருப்பதால் அது அந்த ஊரின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் திருவண்ணாமலையில் கோவில் தவிர பல ஸ்பாட்கள் பார்க்க இருக்கின்றன. அவற்றை தான் இதில் பார்க்க இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 27

    திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

    கோடை விடுமுறை வேறு வந்துவிட்டது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், பாண்டிச்சேரி மக்கள் தங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஜவ்வாது மலையைத் தேர்ந்தெடுக்கலாம், கிழக்கு தொடர்ச்சி மலையில் சுமார் 260 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலையில் ஏராளமான அரிய வகை மூலிகை செடிகள் கடந்து வரும் அருவிகள் , டிரெக்கிங் ஸ்பாட்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 37

    திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

    திருவண்ணாமலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும்  கோவிலூர் எனும் கிராமத்தில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. பழங்குடி மக்கள் வழிபாடும் இது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை விடவும் மிகவும் பழமையானதாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

    சிவன் கோவில் மட்டும் இல்லாமல் வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் ஆரணியை அடுத்த திருமலை எனும் ஊரில் சிறு குன்றின் மேல் சமணர் கோயில் ஒன்றும் உள்ளது.  ஏறத்தாழ இதுவும்  1,000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது.  இந்த கோயிலில் இயற்கையான நிறங்களை கொண்டு 15ம் நூற்றாண்டில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்போதும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 57

    திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

    காஞ்சிபுரத்தில் இருந்து வரும் மக்கள், வழியில்  வந்தவாசி செல்லும் சாலையில் நரசமங்கலம் எனும் கிராமத்தில் மாமண்டூர் குடைவரைக்கோவிலை பார்க்கலாம். இங்குள்ள மலை குன்றில் மொத்தம் 4 குகைகள் , அதில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் , மலையின் வடக்கு பகுதியின் முடிவில் சமணர் படுகை, அதில் சில தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்த கல்வெட்டுக்கு வயது ஏறத்தாழ 2,000 ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 67

    திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

    சைவ மதத்தின் முக்கியத்தளமான திருவண்ணாமலையில்  தமிழ்நாட்டின் முதல் நடராஜர் சிற்பம் செதுக்கப்பட்ட  கோயில் ஒன்று உள்ளது. வந்தவாசியின் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் சீயமங்கலம் என்ற ஊர் உள்ளது. அங்குள்ள குடைவரைக் கோவிலை பற்றி தான் சொல்கிறோம். அங்கு நடராஜரின் பல  உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 77

    திருவண்ணாமலையில் கோவிலை தவிர இத்தனை இடங்களை பார்க்கலாம் தெரியுமா..? குழந்தைகளோடு செல்ல சூப்பர் ஸ்பாட்.!

    இது தவிர தடாகபுரிஸ்வரர் ஆலயம் மற்றும் மடம், கூழமந்தல் சோழீஸ்வரர் கோயில், பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வர்ர் கோயில், சாத்தனூர் அணை, முனுகப்பட்டு அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில், குரங்கணில் முட்டம் வாலிஸ்வரர் திருக்கோயில், படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில், தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில், ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வரர் கோயில், செய்யாறு அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயில் மற்றும் பர்வதமலை ஆகியவை சுற்றிபார்க்க ஏற்ற இடமாகும்.

    MORE
    GALLERIES