நாகலாபுரம் பகுதியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற சிலர் நீர்வீழ்ச்சியில் சிக்கி மரணமடைந்தனர். மக்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்னர் தற்போது பாதுகாத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வனத்துறையினர் உதவியோடு நீர்வீழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நாகலாபுரம் அருவியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளது. பாதுகாப்பு கருதி முதல் நீர்வீழ்ச்சிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 2 மற்றும் 3ஆவது நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக நீரில் விளையாட லைப் ஜாக்கெட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.