மகாராஷ்டிராவில் பல பழமையான கோவில்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. மகாராஷ்டிராவின் முக்கிய நகரமான நாக்பூரில் இருந்து 75 கிமீ தொலைவில் அம்போராவில் ஒரு முக்கியமான சிறப்பு வாய்ந்த கோவில் உள்ளது. அதன் சிறப்புகளை பற்றி தான் இந்த செய்தி தொகுப்பில் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
அதுமட்டும் இல்லாமல் இந்த சங்கம இடம், ஆன்மீக முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. 5 நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே உள்ள குன்றில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன், சைதன்ய வடிவில்இருப்பதாக நம்புகின்றனர். அது மட்டும் இல்லாமல் ராமாயணத்தில், ராம-லக்ஷ்மணன் மற்றும் சீதை இந்த நதி வழியாக தான் அயோத்திக்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மகாபாரதத்தில் பாண்டவர்கள் 5 பேரும் சில காலம் இங்கு வனவாசம் இருந்ததாக கூறுகிறார்.
ஆன்மிகம் மட்டுமின்றி, அழகிய சுற்றுப்புறங்களுக்கும், இயற்கை அழகுக்கும் சாட்சியாக விளங்கும். அம்போராவிற்குள் நுழையும் போது வைங்கங்காவின் பரந்த நீர்த்தேக்கம் வலதுபுறத்தில் தெரியும். வைங்கங்கா அணையின் பின்புறம் ஒரு பெரிய நீர்த்தேக்கமும் பலம் ஒன்றும் உள்ளது. பாலத்தில் மீது இருந்து இந்த இடத்தின் அழகை ரசிக்கலாம்.
பாலத்தின் நீளம் 705.20 மீட்டர் மற்றும் அகலம் 15.26 மீட்டர். இந்த பாலம் ஒரு முக்கிய போக்குவரத்து வழிமுறையாக மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு சுற்றுலா தலமாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாலத்தில் இருந்து சைதன்யேஸ்வரர் கோவில் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.