வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், மழைக்காலத்திற்கு முன்பு இந்தத் திருவிழா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் மூன்றாவது வாரம் தொடங்கி ஜூன் மூன்றாவது வாரம் வரை இந்த திருவிழா நடக்கவுள்ளது. மின்மினிகள் இங்குள்ள மேற்குதொர்ச்சி மலை காட்டுப்பகுதிக்கு வரும் காலத்தை கணக்கிட்டு இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு சீக்கிரமே மின்மினி பூச்சிகள் வரத்து இருப்பதால் மே மாதத்திலேயே , மில்லியன் கணக்கான மின்மினிப் பூச்சிகள் சுற்றியுள்ள காடுகளை ஒளிரச் செய்யம் என்று எதிர்பார்க்கின்றனர். சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். அதேபோல இளைய சமூகத்திற்கு மின்மினிகளை பழக்கப்படுத்தவும் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருவிழாவிற்கு வருபவர்கள் மின்மினிப் பூச்சிகளைக் காண காட்டு வழியாக இரவு நடைப்பயணம், பாரம்பரிய கிராமிய அனுபவங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அனுபவிக்க முடியும். இந்த திருவிழா பார்வையாளர்களுக்கு உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மேலும் இது கிராம மக்களுக்கு வேலைகளை வழங்கி உள்ளூர் வணிகங்களை ஆதரிக்க உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த திருவிழா பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பில் சுற்றுலாவின் தாக்கம் மற்றும் பொறுப்பான சுற்றுலா நடைமுறைகளின் தேவை பற்றிய கவலைகளையும் எழுப்பியுள்ளது . அதே போல பூச்சி இனங்களை அழியாமல் பார்த்துக்கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.