இயற்கையை ரசித்துக்கொண்டே ஒரு சாகசம் செய்ய எண்ணினால் கோவாவில் உள்ள கோன் சதுப்பு நில காடுகளில் கயாக்கிங் அல்லது கேனோயிங் எனப்படும் படகு சவாரி செய்யலாம். ஒரு நபருக்கு 500 முதல் 800 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் காசுக்கு வொர்த் மக்களே! அதுவும் இருவரும் இணைத்து துடுப்பு போடும் படகை எடுத்துக் கொண்டால் நிச்சயம் அது ரொமான்டிக் ட்ரிப்பாக அமையும்
எங்கள் விருப்பம் அதுவும் இமயமலை சாரல்களை பார்க்கவேண்டும் என்று எண்ணினால் மேற்கு வங்காளத்தின் சண்டக்புவில் மலையேற்றத்தை தேர்ந்தெடுங்கள். இங்கிருந்து காஞ்சன்ஜங்கா மலை, எவரெஸ்ட், லோட்சே, மகலு மற்றும் அன்னபூர்ணா போன்ற மலைகளின் அற்புதமான காட்சிகளை நீங்கள் காணலாம். அது மாட்டுக் இல்லாமல் இந்த மலை ஏற்றம் உங்களை ரோடோடென்ட்ரான்கள் மற்றும் பைன் தோப்புகள் வழியாக அழைத்துச் செல்லும்.
கடலும் வேண்டாம் மழையும் வேண்டாம் ஆகாசத்தில் பார்க்கத்தான் ஆசையா?இமாச்சலப் பிரதேசத்தின் சோலாங் பள்ளத்தாக்கில் பாராகிளைடிங் இந்தியாவின் சிறந்த பாராகிளைடிங் ஸ்பாட்களில் ஒன்று. அதுவும் இந்த மாதம் பனிப்பொலிவோடு இமாலய படுத்தியே பார்க்க ஏற்றது. ஆனால் நீங்கள் பாராகிளைடிங் செல்வதற்கு முன் வானிலை நிலையை சரிபார்க்கவும். ஏனெனில் இப்பகுதியில் பனிப்பொழிவு ஏற்படலாம்.