அதே போன்ற அழகான பாலம் ஒன்று இந்தியாவில் உள்ளது. உத்தரகாண்டில் உள்ள கர்டாங் கலி, ஆபத்து இல்லாமல், அந்த அனுபவத்திற்கு உங்களுக்குத் தரும். கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள கங்கோத்ரி தேசியப் பூங்காவிற்குள் பாய்ந்து கொண்டிருக்கும் ஜத் கங்கை நதியின் மீது தான் நங்கள் சொல்லும் பாலம் அமைந்துள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த பாலம் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே ஒரு பழங்கால வர்த்தக பாதையாக செயல்பட்டதாம். உத்தரகாசி மாவட்டத்தில் நெலாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த மரப்பாலம் உப்பு, கம்பளி, வெல்லம், மசாலா மற்றும் தோல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த பாலம் நடுவில் பயன்படுத்தாமல் மூடப்பட்டிருந்தது.