சித்திரை மாதம் ஸ்டார்ட் ஆகி விட்டது. "டூடே வெதர்" என்று கூகுள் செய்து பார்த்தால் 40 டிகிரிக்கு குறையாமல் காட்டுகிறது. "அடிக்கிற வெயிலுக்கு வாட்டர் டேங்க்குள்ள இறங்கி... ஒரு அரை மணிநேரம் உட்காந்துட்டு வரலாம் போல இருக்கு!" என்கிற மைண்ட் செட்ல இருக்குற எல்லோருடைய மனதிலும் ஒரே ஒரு எண்ணம் தான் ஓடிக்கொண்டு இருக்கும், அது - ஏதாச்சும் ஓரு ஹில் ஸ்டேஷனுக்கு போயி.. ஒரு ரெண்டு மூணு நாள் ஜாலியா இருந்துட்டு வரணும்!
ஷில்லாங்:இது உண்மையிலேயே ஒரு சொர்க்கமாகும், குறிப்பாக கோடைக்காலத்தில் பார்வையிட மிகவும் சிறந்த மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். 'கிழக்கின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் ஷில்லாங், ஆரோக்கியமான சூழல், மலைகள், இயற்கை எழில் கொஞ்சும் அழகிற்கு பெயர் போனது. முக்கியமாக, ஷில்லாங்கில் வாழும் துடிப்பான மக்களுடன் கலந்துரையாட மறக்க வேண்டாம்.