வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவாகும் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். நிறைய காசு வைத்திருப்பவர்கள் தான் போவார்கள் என்ற பிம்பம் கூட இருக்கும். ஆனால் சரியாகத் திட்டமிட்டால் குறைந்த பட்ஜெட்டில் ஒருசில நாடுகளுக்கு எளிதாக சென்று வரலாம். அந்த நாடுகளைத் தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்
இலங்கை என்பது இந்தியாவின் அருகே உள்ள சிறிய தீவு நாடுதான் என்றாலும் பசுமையான தேயிலை தோட்டங்கள் முதல் பழமையான கோவில்கள் மற்றும் அழகான கடற்கரைகள் வரை, பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்ற பல்வேறு வசதிகளை வழங்குகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரத்தை ஆராயலாம், சிகிரியா பாறையின் உச்சிக்கு ஏறலாம் அல்லது மிரிஸ்ஸ கடற்கரையை ரசிக்கலாம்