முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

ஹெல்மட் அணிந்துகொண்டு பறக்கும் ராசாளியே என்று பாடிக்கொண்டு பைக் ட்ரிப்பானாலும்  காரில் ட்ரிப் சென்றாலும் ,இந்த சாலைகளை மிஸ் பண்ண வேண்டாம்...

  • 110

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    பயணம் என்பது பல வகைகளில் மேற்கொள்ளப்படும். சிலர் ரயில்களில் பயணம் செய்ய ஆசை படுவர். சிலர் விமானம் மூலம் பயணம் செய்வர். ஒரு சிலர் தங்களது சொந்த இரு சக்கர அல்லது 4 சக்கர வண்டியில் பயணம் செய்வது விருப்பமாக கொண்டிருப்பர். இப்போது புதிதாக  கேராவேன் பயணங்கள் வேறு பிரபலமாகி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 210

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    ஹெல்மட் அணிந்துகொண்டு பறக்கும் ராசாளியே என்று பாடிக்கொண்டு பைக் ட்ரிப்பானாலும்  காரில் ட்ரிப் சென்றாலும் , இயற்கை அழகையும், புதிய கலாச்சாரத்தையும் ரசித்துக்கொண்டே போக ஏற்ற தெலுங்கானாவில் உள்ள இந்த 10 மிக அழகான சாலைகளில் ஒரு ஆஃப்பீட் பயண அனுபவத்தை மேற்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 310

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    ஹைதராபாத் - விகாராபாத் சாலை: பரபரப்பான ஹைதராபாத் நகரத்திலிருந்து தொடங்கும் இந்த சாலை, இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் அழகிய கிராமங்கள் வழியாக உங்களை அழைத்துச் சென்று அழகிய ஆனந்தகிரி மலையில் கொண்டு சேர்க்கும். மழைக்காலத்தில் மலைகள் பசுமையாக சூழ்ந்திருக்கும் போது பயணம் சிறப்பாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 410

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    கம்மம் - சூர்யாபேட்டை சாலை : கம்மம் மற்றும் சூர்யாபேட்டை நகரங்களை இணைக்கும் இந்த சாலை அற்புதமான நெல் வயல்களின் வழியாகவும் கிராமங்கள் மற்றும் அமைதியான ஏரிகள் வழியாகவும் செல்கிறது. குறிப்பாக சூரிய அஸ்தமனத்தின் போது இந்த சாலையில் செல்லும் போது வாகனங்கள் ஒரு கண்கவர் கேன்வாஸ் வண்ணங்களாக மாறும் . பயணத்தை அழகேற்றும்.

    MORE
    GALLERIES

  • 510

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    வாரங்கல் - முலுகு சாலை: இந்த சாலை தெலுங்கானாவின் பழங்குடிப் பகுதியின் மையப்பகுதி வழியாக உங்களை அழைத்துச் செல்கிறது, அங்கு நீங்கள் பழமையான பாறை அமைப்புகளையும், அருவிகள் மற்றும் அடர்ந்த காடுகளையும் காணலாம். இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக ஏதுர்நகரம் வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக செல்லும் போது அதையும் கண்டு ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 610

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    ஹைதராபாத் -நாகார்ஜுனா சாகர் சாலை: நல்லமலா வனத் தொடரின் வழியாக உங்களை அழைத்துச் செல்லும் இந்த சாலை,  அழகிய கிருஷ்ணா நதியின் எழில் கொஞ்சும் காட்சிகளை உங்கள் கண்முன் கொண்டு வரும். இந்த பயணம் நாகார்ஜுனா சாகர் அணையில் முடிவடைகிறது.

    MORE
    GALLERIES

  • 710

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    அடிலாபாத் -கடம் சாலை : இந்த சாலையானது அடிலபாத்தின் பசுமையான காடுகளின் வழியாக உங்களை அழைத்துச் சென்று அமைதியான கடம் அணையில் முடிவடைகிறது. மழைக்காலங்களில் சாலையோரம் அருவிகள் நிரம்பி வழியும் போது பயணம் சிறப்பாக மாறும்.

    MORE
    GALLERIES

  • 810

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    ஹைதராபாத் - மேடக் சாலை : இந்தச் சாலை உங்களை மேடக் நகரத்தின் வழியாக அழைத்துச் செல்கிறது. இது மேடக் கதீட்ரலுக்குப் பெயர் பெற்றது . இந்தப் பயணம், பசுமையான நெல் வயல்களின் அற்புதமான காட்சிகளையும் வழியில் உள்ள அழகிய கிராமங்களை காணும் வாய்ப்பையும் தருகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    நிஜாமாபாத் -பாசார் சாலை: தெலுங்கானாவில் உள்ள புகழ்பெற்ற புனித யாத்திரை தலமான பாசர் சரஸ்வதி கோயில் வழியாக இந்த சாலை உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த பயணம் பசுமையான காடுகள் மற்றும் அழகிய கோதாவரி நதியின் அற்புதமான காட்சிகளை உங்களுக்கு வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

    ஹைதராபாத் - அடிலாபாத் சாலை: இந்த சாலை, அடிலபாத்தின் அடர்ந்த காடுகளின் வழியாக உங்களை அழைத்துச் செல்கிறது மற்றும் தெலுங்கானாவின் பாரம்பரிய பழங்குடி கலைகள் மற்றும் கைவினைகளை வெளிப்படுத்தும் கலை மையமான கலா ஆசிரமத்தின் வழியாக செல்வதால் அதையும் பார்த்து ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES