கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் முடிய இருக்கிறது. நடுவில் சில நாட்கள் பெய்து குளுகுளுவென்று இருந்தாலும் இப்போது அடிக்கும் வெயிலுக்கு எங்காவது தப்பித்து ஓடிவிடலாம் என்று தான் இருக்கிறது. அப்படி குழந்தைகளோடு வெளிஊர் சுற்றுலா செல்ல ரயிலில் ஜாலியாக சென்று பார்க்கக்கூடிய 5 அழகான ஸ்பாட்களைத் தான் சொல்ல இருக்கிறோம்.
அது மட்டும் இல்லாமல் இப்போது புதிய வகை பயணம் ஒன்று பிரபலமாகி வருகிறது. கிளாம்பிங் glamping என்று அழைக்கப்படும் இது எப்போது நாம் போகும் முகாம்- கேம்ப் முறைகளிலேயே கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட ஒன்று என்று சொல்லலாம். இதில் தங்குமிடங்கள் மற்றும் வசதிகள் பாரம்பரிய முகாமை விட ஒப்பீட்டளவில் ஆடம்பரமானவை. அப்படியான பிரபலமான கிளாம்பிங் இடங்கள் சில ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே இருக்கின்றன.
ஜெய்சால்மர் (ராஜஸ்தான்) : டெசர்ட் கிளாம்பிங் எனும் ஆடம்பர பாலைவன முகாம்களுக்கு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் பெயர் பெற்றது. அற்புதமான மணல் திட்டுகள் மற்றும் வளமான கலாச்சார திருவிழாக்களை இந்த கிளாம்பிங் இடங்களில் தங்கி பார்வையிடாமல். அதுபோக பாலைவன சஃபாரிகள், ஒட்டக சவாரிகள், இரவு நட்சத்திரங்கலாய் பார்த்துக்கொண்டே இரவு உணவு , நாட்டுப்புற நடனங்கள் மற்றும் இசை நிகழ்வுகள் ஆகியவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா (உத்தரகாண்ட்) : வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் கோசி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, ஆடம்பர மற்றும் அதிநவீன வசதிகளுடன் நிரம்பிய பல்வேறு கிளாம்பிங் அனுபவங்களை தருகிறது. மேலும், இந்த பகுதியில் உள்ள அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளைக் காணும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஜிம் கார்பெட்டுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ராம்நகர் ரயில்நிலையமாகும்.
சுஜன் ஜவாய் சிறுத்தை முகாம், பாலி (ராஜஸ்தான்): இந்த முகாம் ராஜஸ்தானின் பாலியில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும். இங்கு உலகின் வேகமாக ஓடும் உயிரினமான சிறுத்தையை பார்க்கலாம். உள்ளூர்வாசிகள் மற்றும் சிறுத்தைகளின் நட்புறவுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். சகவாழ்வுக்கு இப்பகுதி உறுதியளிக்கிறது, இந்த புல்வெளி முகாமில் கூடாரங்கள் அமைத்து கெம்ப் ஃபயருடன் ருசியான ராஜஸ்தான் உணவுகளையும் சுவைகலாம். அருகில் உள்ள ரயில் நிலையம் என்றால் மோரி பெரா (MOI) 5 கிமீ தொலைவில் உள்ளது. அடுத்தது ஜவாய் பந்த் (JWB) இது 15 கிமீட்டரில் உள்ளது.
கன்ஹா தேசிய பூங்கா (மத்திய பிரதேசம்) : புலிகளைக் கண்டறிவதற்கும் வனப்பகுதி சாகசங்களுக்கும் ஏற்ற இடமான இங்கு கேம்ப் கூடாரங்கள் மட்டும் இல்லாமல் நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள், உணவகங்கள் மற்றும் வனவிலங்குகளைக் கண்டறிவதற்கான சுற்றுப்பயணங்களையும் ஏற்பாடு செய்கின்றனர்.கன்ஹா தேசிய பூங்காவிற்கு நேரடி ரயில் இல்லை என்றாலும், மிக அருகிலேயே ஜபல்பூர், கோண்டியா மற்றும் நாக்பூர் நிலையங்கள் உள்ளன.
கனடல் (உத்தரகாண்ட்): முசோரி மற்றும் டேராடூனுக்கு அருகில் அமைந்துள்ள அமைதியான மலைவாசஸ்தலங்களில் ஒன்று கனடல். இப்பகுதியின் அழகிய பள்ளத்தாக்குகள் சிறந்த கிளாம்பிங் இடமாகவும் உள்ளது. முக்கிய கிளாம்பிங் வசதிகளில் ஒன்று ஆர்கானிக் ஹைட்வேஸ் மூலம் வழங்கப்படும் Eco Glamp. இப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதை தீமாக வைத்துசெயல்படுகிறது. டெஹ்ராடூன் ரயில் நிலையத்தில் இருந்து இந்த இடத்தை ஒன்றரை மணிநேரத்தில் அடையலாம்.