முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

அழகான மலைப்பிரதேசத்தில் சேர்ந்து குடிக்கும் தேநீர், கடற்கரையோரம் ஒரு கேண்டில் லைட் டின்னர் வரை காதலரோடு நேரம் செலவிட பல வழிகள் உண்டு

 • 17

  சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

  பிப்ரவரி மாதம் மட்டும் காதலர்களுக்கான மாதம் இல்லை. விடுமுறை நேரம் கிடைக்கும் போது எல்லாம் காதலர்களும், காதல் தம்பதிகளும் வெளியே தனியாக நேரம் செலவிட நினைப்பர். அழகான மலைப்பிரதேசத்தில் சேர்ந்து குடிக்கும் தேநீர், கடற்கரையோரம் ஒரு கேண்டில் லைட் டின்னர் எல்லாம் தான் ரொமான்டிக் நினைவுகளை சேர்க்கும் சிறந்த வழிகள்.

  MORE
  GALLERIES

 • 27

  சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

  உள்ளூர் இடங்களுக்கு எத்தனை நாள் தான் செல்வது. ஒரு முறை வெளிநாட்டு இடங்களுக்கு போலாம் என்ற எண்ணம் வரும். ஆனால் ரொமான்டிக் ட்ரிப்புக்கு சிறந்த இடம் எது என்ற குழப்பம் ஏற்படும். குழப்பமே வேண்டாம். காதல் ஜோடிகளுக்கு ஏற்ற சர்வதேச ஸ்பாட்களை உங்களுக்கு சொல்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 37

  சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

  ரொமான்டிக் ட்ரிப் என்று சொன்னதும் மனதிற்கு வருவது "காதல் நகரம்" என்று குறிப்பிடப்படும் பாரிஸ் நகரம் தான். பாரிஸ் அதன் காதல் சூழ்நிலை, பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் சுவை ததும்பும் உணவு வகைகளுக்கு பிரபலமானது.சீன் ஆற்றின் கரையில் உலா வருவது முதல் இரவில் ஒளிரும் ஈபிள் டவரை பார்த்துக்கொண்டே பிரெஞ்சு உணவுகளை உண்பது வரை சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லை.

  MORE
  GALLERIES

 • 47

  சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

  வசீகரமான கால்வாய்கள், வரலாற்று கட்டிடக்கலை மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றுடன், இத்தாலி நகரத்தில் உள்ள வெனிஸ் நகரம் காதல் பயணத்தை விரும்பும் தம்பதிகளுக்கு மற்றொரு பிரபலமான இடமாகும். குறுகிய நீர்வழிகள் வழியாக கோண்டோலா சவாரி செய்யலாம். அதேபோல நகரத்தின் வளைந்த தெருக்கள் மற்றும் அழகிய சதுரங்கள் வழியாக சுற்றி திரிந்து உங்கள் காதலருக்கு பரிசுகளை வாங்கி தரலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

  ஏஜியன் கடலில் உள்ள இந்த அற்புதமான தீவு அதன் கரடுமுரடான பாறைகள், டர்க்கைஸ் நீர் மற்றும் மனதை வசப்படுத்தும் அழகான சூரிய அஸ்தமனங்களுக்கு பெயர் பெற்றது. அழகிய நகர அமைப்பு, தெரிந்த நீர் அலைமோதும் கடற்கரைகள், உள்ளூர் திராட்சைத் தோட்டங்களில் மது ருசிப்பது, தீவின் பல அழகான கிராமங்கள் மற்றும் பழங்கால இடிபாடுகளை ஆராய்வது என்று தம்பதிகள் நேரத்தை செலவிட நிறைய விஷயங்கள் உண்டு. இந்த நகரத்தை எங்கேயும் காதல் படத்தில் ‘நெஞ்சில் நெஞ்சில்’ பாடலில் பார்த்திருக்க கூடும்.

  MORE
  GALLERIES

 • 67

  சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

  பசுமையான வெப்பமண்டல நிலப்பரப்புகள், அமைதியான கடற்கரைகள் மற்றும் ஆடம்பரமான ஓய்வு விடுதிகளுடன், பாலி தேனிலவு மற்றும் காதல் ஜோடிகளுக்கு பிரபலமான இடமாகும். கடற்கரையில் கைகோர்த்து நடந்து கழிப்பது, ஒன்றாக சமையல் வகுப்பில் கலந்து கொள்வது, சர்பிங் போன்ற சாகச முயற்சிகள் செய்வது என்று அணைத்து விதமான ரொமான்டிக் விஷயங்களையும் முயற்சிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  சம்மர் ஹாலிடே.. காதல் தம்பதிகள் செல்ல சூப்பரான 5 ரொமான்டிக் நகரங்கள்.!

  பிரமிக்க வைக்கும் கோவில்கள், அமைதியான தோட்டங்கள் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற கியோட்டோ, மிகவும் அமைதியான மற்றும் சிந்தனைமிக்க அனுபவத்தை விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு அற்புதமான இடமாகும். புகழ்பெற்ற மூங்கில் காடு வழியாக உலா செல்லலாம், பாரம்பரிய தேநீர் விழாவில் கலந்துகொள்ளலாம், அல்லது நகரின் பல வரலாற்று தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை ஆராயலாம். அதும் இந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் அங்கு தெருக்கள் முழுவதும் செர்ரி மலர்கள் பூத்து குலுங்கும். அந்த காட்சியில் படங்கள் எது நினைவுகளை சேர்க்கலாம்.

  MORE
  GALLERIES