என்னதான் விமானம், ராக்கெட், விண்வெளி பயணம் என்று சொன்னாலும் ரயில் பயணத்திற்கு இருக்கும் சுவாரசியம் தனி தான். ஒரு இரவு ஒரு நாள் ரயில் பயணம் என்பதை விட இரண்டு வாரங்கள் பயணிக்கும் ரயில் பயணம் எப்படி இருக்கும் தெரியுமா? இன்று உங்களுக்கு அப்படியன உலகின் 5 நீண்ட ரயில் வழித்தடங்களைப் பற்றி தான் கூற இருக்கிறோம். இதில் இந்தியாவின் ரயில் பாதையும் அடங்கும்.
முதலாவது டிரான்ஸ்-சைபீரியன் இரயில்வே நிர்வகிக்கும் ரயில் தான். ரசிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் வரை செல்லும் ரயில் தான் இப்போது மிக நீண்ட ரயில் வழித்தடமாக உள்ளது. இந்த பயணத்தை முடிக்க 7 நாட்கள் 20 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும்.இந்த பயணம் மொத்தம் 10,214 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது.
அசாம் மாநிலத்தின் திப்ருகரில்(Dibrugarh) இருந்து கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை உலகின் 5வது மிக நீண்ட ரயில் பயணமாகும். இந்த 2 நகரங்களுக்கு இடையே விவேக் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்தப் பயணம் 4237 கிலோமீட்டர்களை கொண்டுள்ளது. இந்தப் பயணத்தை முடிக்க ரயில் 74 மணி நேரத்திற்கும் மேலாகிறது. நான்காவது நீண்ட ரயில் பாதையை விட இது அதிக நேரம் எடுக்கிறதே என்று நினைக்கலாம். கடந்து வரும் புவியியல் பாதை அப்படி.