இந்தியாவில் உள்ள விலையுயர்ந்த ரயில்கள் மற்றும் வித்தியாசமான ரயில் நிலையங்களைப் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஹிமாச்சல், உத்தரகண்ட் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இமயமலையின் பனி சாரலில் உங்களை அழைத்துச் செல்லும் ரயில்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அப்படியான ஐந்து அற்புதமான ரயில்கள் பட்டியல் இங்கே...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வேயின் ரயில் நியூ ஜல்பைகுரியிலிருந்து சுனாபட்டி, திண்டாரியா, கயாபாடி வழியாக டார்ஜிலிங்கிற்குச் செல்கிறது. பயணத்தின் போது தேயிலை தோட்டங்கள், காடுகள் மற்றும் பனி மூடிய சிகரங்கள் என இயற்கையின் பல அற்புதமான காட்சிகளைக் காணலாம்.
உதம்பூர் மற்றும் கத்ரா இடையே செல்லும் 53 கி.மீ. ரயில் பாதை சிவாலிக் மலைத் தொடர்களைக் கடந்து செல்லும் போது பார்க்க வேண்டிய பல அழகிய இடங்களை உங்களுக்கு காட்டும். இந்த வழித்தடத்தில் உலகின் மிக உயரமான பாலமான செனாப் பாலம் கட்டப்பட்ட பிறகு.. பயண அனுபவம் வேறு லெவல். இயற்கையின் சோலைகளுக்கு இடையேயான இந்தப் பயணம் அற்புதமானது என்றே சொல்ல வேண்டும்.
காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் :
Kangra Valley Railway - பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜோகிந்தர் நகர் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை 1929 இல் ஆங்கிலேயர்களால் பதான்கோட்டை டல்ஹவுசி ஹில் ஸ்டேஷனுடன் இணைக்க உருவாக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஜோகிந்தர் நகர் வரை நீட்டிக்கப்பட்டது.இந்தப் பாதையில் புகழ்பெற்ற காங்க்ரா பள்ளத்தாக்கு பாலம் உட்பட 950க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள் உள்ளன.