கனவுகளின் நீண்ட பாலம் என்று அழைக்கப்படும் ஷிஜிகுவான் மிதக்கும் பாலம்(shiziguan floating bridge), சீனாவின் தென்மேற்கு ஹூபே(Hubei ) மாகாணத்தில் உள்ள சுவான்(Xuan'en) பகுதியில் அமைந்துள்ளது. இது உலகின் மிகவும் பிரபலமான போண்டூன்(pontoon) பாலங்களில் ஒன்றாகும். பசுமையான மரங்கள் மற்றும் ஒரு நதியால் சூழப்பட்ட ஷிசிகுவானுக்குள் மரத்தாலான பலகை பாலம் மீது பயணிக்கும்போது, நீர் மேற்பரப்பில் நகர்வது போன்ற அற்புதமான அனுபவத்தை மக்களுக்கு வழங்குகிறது.
நார்வேயின் வெஸ்ட்லேண்ட் கவுண்டியில் உள்ள கிளாவனசெட் (Klauvaneset) மற்றும் பிளாட்டே தீவு (island of Flatøy) இடையே சல்ஹுஸ்ஃப்ஜோர்ட (Salhusfjorden) என்ற fjord வகை நீர்நிலை உள்ளது. அதை கடக்க நார்ட்ஹார்ட்லேண்ட்(Nordhordland ) பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,295 அடி நீளம் கொண்ட, கேபிள்-இணைக்க பட்ட பாலம் மற்றும் பான்டூன் பாலங்களின் கலவையாகும். பாலத்தின் பாண்டூன் பகுதி நார்வே நாட்டு கடல்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
மூன்றாவது ஏரி வாஷிங்டன் பாலம்(Third Lake Washington Bridge) என்றும் அழைக்கப்படும் ஹோமர் எம். ஹாட்லி மெமோரியல் பாலம், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டில்(Seattle) பெருநகரப் பகுதியில் உள்ளது. இது உலகின் ஐந்தாவது நீளமான மிதக்கும் பாலமாகும் மற்றும் 5,811 அடி நீளம் கொண்டது. தற்போதைய பாலம் 1993 இல் கட்டப்பட்டது.