முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

கஜுராஹோ கோவிகள் இருக்கும் மத்திய பிரதேசத்தில் அதைத்தாண்டி சிறப்புமிக்க சில முக்கிய கோவில்களும் உள்ளன.

  • 16

    இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

    மத்தியபிரதேசம் மாநிலம் முழுவதுமே பசுமையான காடுகள், அழகிய கட்டிடங்கள் என்று பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. உலகின் அற்புதமான கட்டிடக்கலைகள் கொண்ட கஜுராஹோ கோவிகள் இருக்கும் மத்திய பிரதேசத்தில் அதைத்தாண்டி சிறப்புமிக்க சில முக்கிய கோவில்களும் உள்ளன. அவற்றை பற்றிதான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 26

    இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

    அன்னபூர்ணா கோவில்: இந்தூரில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்து தெய்வமான அன்னபூர்ணாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இங்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அன்னபூர்ணா தேவி தவிர, காலபைரவர், சிவன் மற்றும் அனுமன் போன்ற தெய்வங்களின் சிலைகளும் இந்த கோவிலில் நிறுவப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

    பெரிய கணபதி கோவில்: கோவிலில் உலகின் மிகப்பெரிய 25 அடி உயர விநாயகர் சிலை உள்ளது.  1875 ஆம் ஆண்டு கட்டப்பட்ட படா(பெரிய) கணபதி கோயில் கோவில்,  இந்தூரில் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

    இந்தூருக்கு அருகிலுள்ள சிறிய குன்று கோமத்கிரி, ஜெயின் யாத்ரீகர்களுக்கு மிகவும் பிரபலமான மத ஸ்தலங்களில் ஒன்றாகும்.  24 தீர்த்தங்கரர்களில்   ஒருவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில்  21 அடி கோமதேஷ்வர் சிலை உள்ளது. இந்த சிலை ஷ்ரவன்பெகோலா பாகுபலி சிலையின் பிரதி என கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

    கஜ்ரானா கணேஷ் கோவில்: இந்தூரில் உள்ள கஜ்ரானா கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் நாட்டின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இத்திருக்கோயிலில்  பக்தர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதற்காகவே இங்கு கூட்டம் குவிகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    இந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள்..!

    பிஜாசென் மாதா கோவில்: இந்த கோவில் 1760 ஆம் ஆண்டு இந்தூர் பகுதியை ஆன்ற மராத்திய மன்னர் மகாராஜா சிவாஜிராவால் கட்டப்பட்டது. பழங்காலத்தில் இங்கு அடர்த்தியான காடு இருந்ததாக அறிக்கை கூறுகிறது. தந்திர-மந்திரத்திற்கு பிரபலமான இந்த கோவிலில்  காளியை தெய்வமாக கும்பிடுகிறார்கள்.

    MORE
    GALLERIES