முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

சில சிறந்த இடத்தில் தங்குவதற்கு அந்த நாடே உங்களுக்கு பணம் கொடுத்தால், அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்

 • 17

  மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

  ஒரு அழகான இடத்திற்குச் செல்லும்போது, ​​​​அங்கே கொஞ்ச நாள் தங்க வேண்டும் என்று நினைப்பது  அனைவருக்கும் தோன்றுவது தான். இருப்பினும், அத்தகைய இடங்களில் குடியேறுவதற்கான செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். அதனாலேயே அந்த எண்ணத்தை அப்படியே குழிதோண்டி புதைத்துவிடுவோம்.

  MORE
  GALLERIES

 • 27

  மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

  ஆனால் உலகின் சில சிறந்த இடத்தில் தங்குவதற்கு அந்த நாடே உங்களுக்கு பணம் கொடுத்தால், அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! செம ஆஃபர் தானே? அத்தகைய 5 இடங்களைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்வோம்.

  MORE
  GALLERIES

 • 37

  மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

  இந்த பட்டியலில் முதலில் இருப்பது ஒரு இத்தாலிய நகரம். இத்தாலி அருகே உள்ள ப்ரெசிஸ்( Presicce) என்ற இடத்தில் குடியேறுவதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் அந்த நாட்டின் அரசே உங்களுக்கு கொடுக்கிறது . இங்கு பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் மக்கள் தொகை பெருகவில்லை. மக்கள்தொகையை அதிகரிக்க தான் இந்த ஐடியா.

  MORE
  GALLERIES

 • 47

  மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

  இரண்டாவது இடத்தில் உள்ளது கிரேக்க தீவு ஆன்டிகிதெரா (Antikythera ) ஆகும். யாராவது இங்கு குடியேற முடிவு செய்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் அரசு அவருக்கு வழங்கும். தற்போது இந்த தீவில் 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அதனால் இந்த தீவில் கூட்டம் இல்லாமல் ஜாலியாக வாழலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

  இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில்  உள்ளது சுவிட்சர்லாந்தை சேர்ந்த அல்பினென்(Albinen) என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில்   குடியேறும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு ரூ.20 லட்சமும், தம்பதிகளுக்கு ரூ.40 லட்சமும் வழங்குகிறது. இது தவிர குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டக்கூடாது என்பது மட்டும் தான் நிபந்தனை.

  MORE
  GALLERIES

 • 67

  மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

  இந்த பட்டியலில் உள்ள நான்காவது இடம் அமெரிக்காவில் உள்ள  அலாஸ்கா. பனி மற்றும் குளிரால் இங்கு வாழ்பவர்கள் குறைவு, ஆனால் இங்கு தங்குபவருக்கு ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1 வருடமாவது இங்கு தங்க வேண்டும் என்பது நிபந்தனை.

  MORE
  GALLERIES

 • 77

  மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

  பட்டியலில் ஐந்தாவது இடத்தில இருப்பது, ஸ்பெயினில் உள்ள பொங்கா என்ற கிராமம். மக்கள் தொகை குறைந்த இத்தகைய சூழ்நிலையில், பொருளாதாரத்தை அதிகரிக்கவும், இளம் குடிமக்களை ஈர்க்கவும், ஒவ்வொரு தம்பதியருக்கும் இங்கு குடியேற உள்ளூர் அதிகாரிகளால் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கும் போது குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது

  MORE
  GALLERIES